The protesters demanded the removal of elements against people and workers in the central budget.

திருச்சி

மத்திய பட்ஜெட்டில் மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரான அம்சங்களை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட செயலாளர் சிவபெருமாள் தலைமை தாங்கினார். பெல் தொழிற்சங்க பேரவை செயலாளர் எத்திராஜ் முன்னிலை வகித்தனர். 

"மத்திய பட்ஜெட்டில் மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரான அம்சங்களை நீக்க வேண்டும். 

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது. 

கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தேசிய நிதியம் உருவாக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 

தொ.மு.ச. மாவட்ட தலைவர் குணசேகரன், பி.எஸ்.என்.எல். ரவீந்திரன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சம்பத், ஏ.ஐ.டி.யு.சி. சுரேஷ், ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்பட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கருப்புக்கொடியை கையில் ஏந்திக் கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.