நேர்ல வர முடியல.. கண்டிப்பாக ஃபங்ஷனுக்கு வந்துடுங்க.. கொரோனா பாதிப்பிலும் பிரதமரை அழைத்த முதல்வர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார்.
கொரோனா நோய்த்தொற்று
முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் காவேரி மருத்துவமனையில் இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு 12 ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் அவர்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அப்பொழுது, லேசான உடல் சோர்வு ஏற்பட்டது, இதனால் பரிசோதனை மேற்கொண்டேன் அதில் தொற்று உறுதி செய்யப்பட்டது என அவர் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அவர் தனது இல்லத்தில் தனிமைபடுத்திக்கொண்டிருந்த அவர், மருத்துவ பரிசோதனைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு நேற்று வருகை தந்தார். மருத்துவமனையில் முதலமைச்சருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு குறித்து பரிசோதனை மேற்கொள்ள சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதோடு கொரோனா தொற்று அறிகுறிகளும் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என அதில் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதி..! நுரையீரல் பாதிப்பு எப்படி உள்ளது..? சிடி ஸ்கேன் முடிவு இதோ...
முதல்வரை தொடர்ந்து அமைச்சரை விரட்டி விரட்டி தாக்கும் கொரோனா.. அதிர்ச்சியில் உ.பி.க்கள்..!
செஸ் போட்டிக்கு பிரதமருக்கு அழைப்பு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மாலை அல்லது நாளை இல்லம் திரும்பவர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றனர் அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்தநிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் தங்கி முதலமைச்சர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உடல் நலம் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி மூலம் முதலமைச்சரிடம் விசாரித்துள்ளார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உடல்நிலை குறித்து விசாரித்ததற்க்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை மூலம் நன்கு குணமடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். சென்னையில் வரும் ஜூலை 28-ஆம் தேதி துவங்க உள்ள உலக செஸ் விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்ட முதலமைச்சர் தான் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு டி.ஆர். பாலு, திருமதி கனிமொழி, மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும் துவக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
இதையும்படியுங்கள்
பொன்னையன் முன்பை போல் இல்லை..! பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார்-சீறிய துரைமுருகன்