Asianet News TamilAsianet News Tamil

சரணடைய வந்தவர்களை போலீசார் சுட்டுக் கொன்று விட்டனர்...! உறவினர்கள் குற்றச்சாட்டு

The police shot dead those who surrendered ... relatives accused
The police shot dead those who surrendered ... relatives accused
Author
First Published Mar 2, 2018, 11:37 AM IST


மதுரை, சிக்கந்தர்சாவடியில் போலீசார் நேற்று நடத்திய என்கவுண்டரில் முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய 2 ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் கைது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், சிக்கந்தர் பகுதியில் ஒரு வீட்டுக்குள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர், ரவுடிகளை சரணடையுமாறு போலீசார் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அந்த ரவுடிகளோ, போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயற்சி செய்துள்ளனர். இதனால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. இதில் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடிகளின் உடல்கள் மீட்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. 

இந்த நிலையில், என்கவுன்டரில் சுடப்பட்டு உயிரிழந்த ரவுடிகளின் உறவினர்கள் போலீசார் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

போலீசார் திட்டமிட்டு இரண்டு பேரையும் கொன்று விட்டதாக அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர்.  உறவினர்கப் பிடித்து வைத்துக் கொண்டு இரண்டு பேரையும் சரணடையுமாறு போலீசார் வற்புறுத்தியுள்ளனர்.

இதனால் அவர்கள் 2 பேரும் சரணடைந்த பின்னரே உறவினர்களை விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரவுடிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவர்கள் இருவரையும் என்கவுன்டரில் சுட்டுக் கொன்று விட்டதாக போலீசார் மீது அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் இறந்து போனவர்களின் உடல்களைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios