நாடகமாடி பைக்கை திருடி சென்ற பெண் உட்பட மூன்று பேரை போலிசார் தேடி வருகின்றனர்.

மாநகரப் பேருந்து ஓட்டுநரான கிருஷ்ணமூர்த்தி, பெரியார் ஈவெரா சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வேப்பேரி கமிஷனர் அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் தனது செல்போனை ஒருவர் பறித்து கொண்டு செல்வதாக கூச்சலிட்டார்.

இதைபார்த்த கிருஷ்ணமூர்த்தி திருடனை விரட்டிச் சென்றார். அப்போது திருடன் கிருஷ்ணமூர்த்தியை கத்தியால் தாக்க முயன்றார்.

உடனே கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து விலகினார். இதையடுத்து அங்கு மறைந்திருந்த மற்றொரு நபர் கிருஷ்ணமூர்த்தியின் இருச்சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, திருடனையும் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து தப்பினார்.

செல்போன் பறிபோனதாக கூச்சலிட்ட பெண்ணும் மாயமானதால் கிருஷ்ணமூர்த்தி அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்.

தகவலறிந்த போலிசார் வழக்கு பதிவு செய்து மாயமான மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.