Power Shutdown in Chennai : சென்னையில் இன்று எந்த எந்த பகுதியில் மின் தடை தெரியுமா.? வெளியான அறிவிப்பு
பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை சென்னையில் தண்டையார் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்பட இருப்பதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின் வாரியம் அறிவிப்பு
பொதுமக்களின் வாழ்வில் முக்கிய தேவையாக இருப்பது உணவு, குடிநீருக்கு அடுத்தபடியாக மின்சாரமாகும் அந்த வகையில் மக்களோடு ஒன்றிணைந்துள்ளது. மின்சாரம் இல்லையென்றால் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமில்லை இல்லத்தரசிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் மின்சார பராமரிப்பு பணிக்காக மின் தடை செய்யப்படவுள்ள இடங்கள் முன்னதாகவே அறிவிக்கப்படும். அந்த வகையில் மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
பராமரிப்புப் பணிகளுக்காக திங்கள்கிழமை (16.10.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட இருப்பதாகவும் பணிகள் முடிவடைந்தால், பிற்பகல் 02.00 மணிக்கு முன் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தண்டையார்பேட்டை :
அத்திப்பட்டு புதுநகர் சேப்பாக்கம், மவுதம்பேடு, கே.ஆர்.பாளையம், காட்டுப்பள்ளி, நந்தியம்பாக்கம், கரையன்மேடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்ய்ப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்