கை நிறைய பணத்தை அள்ளித்தரும் சொந்த தொழில்.! 3 நாட்கள் சிறப்பு பயிற்சி - தமிழக அரசு அழைப்பு

தமிழக அரசு, தொழில் முனைவோர் மேம்பாட்டுக்காக இராசயான பொருட்கள் மற்றும் வீட்டு பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பு பயிற்சியை வழங்குகிறது. பயிற்சி ஜனவரி 8 முதல் 10, 2025 வரை சென்னையில் நடைபெறும். ஆர்வமுள்ள 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

The notification for the training course related to manufacturing of household care products has been released KAK

தமிழக அரசின் தொழிற்பயிற்சி

தமிழக அரசு சார்பாக வேலை இல்லாதவர்களுக்கு வேலை வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பை முகாம் நடத்தப்படுகிறது. மேலும் சொந்தமாக தொழில் செய்ய விரும்புபவர்களுக்காக பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் பேக்கரி தொழில், வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, அழகு சாதன பயிற்சி  வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இராசயான பொருட்கள் மற்றும் வீட்டு பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

The notification for the training course related to manufacturing of household care products has been released KAK

வீட்டு பராமரிப்பு பொருட்கள்

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், தொழிற்ச்சாலைக்கு உதவும் இராசயான பொருட்கள் மற்றும் வீட்டு பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வரும் 08.01.2025 முதல் 10.01.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பிளாக் ஃபீனைல், கட்டிங் ஆயில், கிரீஸ், தொழில்துறை சோப்பு எண்ணெய், பைப் கிளீனிங் பவுடர். வாட்டர் டேங்க் கிளீனிங் லிக்விட், டிஷ்வாஷ் சோப், டிடர்ஜென்ட் சோப், டெட்டால், எஸ்எஸ் மெட்டல் கிளீனிங் லிக்விட், கார் பாலிஷ் மற்றும் இன்டஸ்ட்ரியல் ஃப்ளோர் க்ளீனிங், ஃப்ளோர் கிளீனர். டிஷ்வாஷ் திரவம், சோப்பு திரவம், ஃபேப்ரிக் சாஃப்ட்னர் & கண்டிஷனர், கை கழுவும் திரவம் மற்றும் பயிற்சி வழிமுறைகளுடன் சுயமாக தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். பங்குபெறும் ஆண். பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். 

The notification for the training course related to manufacturing of household care products has been released KAK

பயிற்சி வகுப்புகளுக்கு அழைப்பு

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை இடிஐஐ அலுவலகச் சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600032.  கைபேசி எண்கள்-8668102600 / 7010143022- இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios