சென்னை அருகே பரபரப்பு.. வானத்தில் ஒரே நேரத்தில் தோன்றிய 4 பறக்கும் தட்டு.? வந்தது வேற்றுக்கிரகவாசிகளா..?
சென்னை முட்டுக்காடு அருகே 4 பறக்கும் தட்டுகள் ஒரே நேரத்தில் பறந்து செல்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பறக்கும் தட்டில் வேற்றுகிரக வாசிகள் வந்தார்களா.? என்ற கோணத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஆராய தொடங்கியுள்ளனர்.
பறக்கும் தட்டும் வேற்று கிரகவாசிகளும்
வேற்றுகிரகவாசிகள் எனப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா? பறக்கும் தட்டு என்ற ஒன்று உள்ளதா.? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் ஏலியன் படங்களைப் பார்க்கும்போதோ கதைகளைப் படிக்கும்போதோ ஆர்வத்தை தூண்டும்.. பல ஹாலிவுட் படங்களில் ஏலியன்கள் பறக்கும் தட்டுகளில் வந்து உலகத்தை தாக்குவது போன்ற படங்கள் வெளியாகி சினிமா பிரியர்களை கவர்ந்தது. ஆனால் உண்மையில் உலகத்தை தாண்டி வேற்று கிரக வாசிகள் உள்ளனர்களா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுவதுண்டு. அந்த வகையில் ஹாலிவுட் படங்களை மிஞ்சுவதைவிட மேலை நாடுகளில் சிலர் வேற்று கிரகவாசிகளை பார்த்தாக கூறி பரபரப்பை ஏற்படுத்துவதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயமாக உள்ளது.
சென்னைக்கு வந்த பறக்கும் தட்டு.?
பறக்கும் தட்டை பார்த்ததாகவும் சில விமானிகள் கூட கூறியதாக செய்திகள் வெளியாகி வேற்று கிரகவாசிகள் பற்றிய நமது ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்து இருக்கும். இந்தநிலையில் பல நாடுகளில் ஆங்காங்கே கேள்வி பட்ட ஏலியன்கள், பறக்கும் தட்டு தொடர்பான தகவல்கள் தற்பொது நம் பக்கத்திலேயே ஒலிக்க தொங்கிவிட்டது. ஆம் சென்னை முட்டுக்காடு பகுதியில் ஒரே நேரத்தில் 4 பறக்கும் தட்டுகளை பார்த்தாக கூறிய தகவல் தான் தற்போது ஹாட் டாபிக்.. அதுவும் சாதாராணமான மனிதர் கூறினால் தட்டி கழித்து சென்று விடலாம் கூறியது தமிழக முன்னாள் டிஜிபி... ஆச்சர்யமாக உள்ளதா ஆம், கூறியது யார் என்றால் தமிழக காவல் துறையில் டிஜிபியாக பணியாற்றி ஓய்வுபெற்றவரும், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் நிறுவனருமான ஐபிஎஸ் அதிகாரி பிரதீப் வி பிலிப் தான் புகைப்படத்தோடு தகவலையும் தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் பறந்த 4 பறக்கும் தட்டுகள்
பறக்கும் தட்டு தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி பிரதீப் வி பிலிப் கூறுகையில், கடந்த 26ம் தேதி தனது மனைவியுடன் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் தங்கியிருந்த போது மாலை 5.30 மணியளவில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நான்கு பறக்கும் தட்டுகளை கண்டதாக தெரிவித்துள்ளார். அவை தற்போது பயன்பாட்டில் உள்ள ட்ரோன்கள் போன்ற ஆளில்லா பறக்கும் குட்டி விமானம் அல்ல என கூறும் முன்னாள் டிஜிபி பிரதிப் வி பிலிப், 20 முதல் 25 விநாடிகளுக்குள் மறைந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனை தனது செல்போன் மூலம் படம் எடுத்ததாக கூறியுள்ளார். அதனையும் வெளியிட்டுள்ளார்.
பறக்கும் தட்டு வந்தது உண்மையா.?
பறக்கும் தட்டு உண்மையா என்ற ஆவல் அனைவரும் மத்தியில் உள்ள நிலையில் முதன்முதலில் ஒரு பறக்கும் தட்டைப் பார்த்ததாகச் சொன்னவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் விமானியான கென்னெத் அர்னால்ட். இவர் 1947ஆம் ஆண்டு, ஜூன் 24ஆம் தேதி, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தின்மீது 9 பறக்கும் தட்டுகளை பார்த்தாக கூறியுள்ளார். இது போன்று பல நாடுகளில் பறக்கும் தட்டு தொடர்பாக தகவல் உண்மையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில் சென்னை அருகே பறந்தது பறக்கும் தட்டா அல்லது புதிய வகை டிரோனா என ஆய்வாளர்கள் ஆராய தொடங்கியுள்ளனர்.
இதையும் படியுங்கள்