மோடி ஆட்சி வெளியேற வேண்டும்! அரசியல் பேசிய சோபியா வழக்கறிஞர்!
இந்தியாவை இருளச் செய்த நரேந்திர மோடி ஆட்சியை வெளியேற்ற வேண்டும் என்று சோபியா வழக்கறிஞர் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.
இந்தியாவை இருளச் செய்த நரேந்திர மோடி ஆட்சியை வெளியேற்ற வேண்டும் என்று சோபியா வழக்கறிஞர் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார். முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில், விமானத்திற்குள் வைத்து, பாஜக தலைவர் தமிழிசையிடம், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என மாணவி சோபியா என்பவர் கோஷமிட்டதாக தமிழிசை கொடுத்த புகாரில் சோபியா கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து சோபியாவை கைது செய்த போலீசார், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் திடீரென சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று சோபியாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சோபியா வழக்கறிஞர் அதிசயகுமார் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம் என கூறியுள்ளார். மேலும் தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்திலும் புகார் அளிப்போம் என்றார்.
இந்தியாவை இருளச் செய்த நரேந்திர மோடி ஆட்சியை வெளியேற்ற வேண்டும். தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது தமிழக காவல்துறையை ஏவி விட்டு இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சோபியா ஜாமீனுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் சோபியா வழக்கறிஞர் கூறியுள்ளார்.