உரக்க சத்தமிட்டு ஊரை ஏமாற்ற முயல்வதா.! இது இபிஎஸ்க்கு கை வந்த கலை- இறங்கி அடிக்கும் தமிழக அமைச்சர்

குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் பல முறை அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதாகவும், ஒன்றிய அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

The minister explains why the Tamil Nadu government decorated vehicle was not present at the Republic Day celebrations KAK

குடியரசு தின விழா- அலங்கார ஊர்தி

குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தமிழக அரசின் செயல்பாட்டை விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு பெ. சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுடெல்லி குடியரசு தின விழாவில் ஆண்டுதோறும் கடமைப் பாதையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் சார்பில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பதனை ஒன்றிய அரசின் சார்பில் அதற்கென அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவின் மூலம் அந்தந்த மாநிலங்களின் சார்பாக, மாநிலங்களின் வளர்ச்சி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் பறைசாற்றுகின்ற வகையில் அலங்கார ஊர்திகளின் வடிவமைப்புகள் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அவை உயர்மட்ட குழுவினரால் உறுதி செய்யப்படுகின்றன.

The minister explains why the Tamil Nadu government decorated vehicle was not present at the Republic Day celebrations KAK

 தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பா.?

2022 ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்நாடு அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அலங்கார ஊர்தி வடிவமைப்பில், சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் அரும்பாடுபட்ட தலைவர்களின் திருவுருவச் சிலைகளை குறிப்பாக, வ.உ.சிதம்பரனார் அவர்களை முன்னிலைப்படுத்திய அலங்கார ஊர்தியின் வடிவமைப்பினை ஒன்றிய அரசால் திட்டமிட்டு பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த முடிவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். ஒன்றிய அரசினால் அனுமதி மறுக்கப்பட்ட இந்த அலங்கார ஊர்திகளை சென்னையிலே கொடியசைத்து தொடங்கி வைத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அலங்கார ஊர்திகள் சென்று இலட்சக்கணக்கான மக்கள் அதைப் பார்த்துப் பாராட்டியது வரலாறு. 

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசின் சார்பில் நடைபெறுகின்ற குடியரசு தின அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் அனைத்து மாநிலங்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு: ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாநிலங்களின் சார்பில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அலங்கார ஊர்திகளுக்கு வாய்ப்பளிக்கப்படுமேயானால், அடுத்து வருகின்ற மூன்றாம் ஆண்டு வாய்ப்பு வழங்கிட இயலாது என்று எழுத்துப்பூர்வமாக அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

The minister explains why the Tamil Nadu government decorated vehicle was not present at the Republic Day celebrations KAK

அதிமுக ஆட்சியில் அலங்கார ஊர்தி நிலை

இது போன்ற அரசின் நடைமுறைகளை, உள் விவகாரங்களை ஒரு முதலமைச்சராக பணியாற்றியவர் என்பதையும் மறந்துவிட்டு, ஏதோ வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்கின்ற பெயரில், யாரோ எழுதித்தருகின்ற தகவல்களின் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் ஒரு தவறான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க ஆண்ட 10ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் ஏதோ தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் தமிழ்நாட்டின் சார்பிலே அலங்கார ஊர்திகள் பங்கேற்றுச் சிறப்பித்தது போன்ற ஒரு மாயையை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் உருவாக்கியுள்ளார். அ.தி.மு.க ஆட்சி நடைபெற்ற 10 ஆண்டுகால ஆட்சியில் கடந்த 2012, 2013, 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் அலங்கார ஊர்திகள் பங்கேற்கவில்லை என்கின்ற விவரமே அவருக்கு தெரியவில்லை.

2014, 2016, 2017. 2019, 2020, 2021.ஆகிய 6 ஆண்டுகள் மட்டுமே அதுவும் தொடர்ச்சியாக இல்லாமல், அ.தி.மு.க. ஆட்சியில் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டன. மேலும், அன்றைய கால கட்டங்களில் ஒன்றிய அரசு தற்போது கொண்டு வந்துள்ள விதிமுறைகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த ஆண்டுகளில் மாநிலத்தின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் பறைசாற்றுகின்ற வகையில், அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகளை ஒன்றிய அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவினர் பலமுறை பார்த்து வியந்து பாராட்டியுள்ளதையும் எதிர்க்கட்சித் தலைவர் அறிந்துகொள்ளவில்லை.

The minister explains why the Tamil Nadu government decorated vehicle was not present at the Republic Day celebrations KAK

உ.பி., குஜராத்திற்கு மட்டும் அனுமதி

எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற பதவி என்பது மிகுந்த மரியாதைக்குரியது என்பதை அவர் உணரவேண்டும். அரசுக்கு ஆக்கபூர்வமான நல்ல யோசனைகளை கருத்துகளைக் கூறி அந்தப் பதவிக்குரிய மரியாதையைக் காப்பாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இதே நேரத்தில், இரண்டு ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் ஊர்திகள் தொடர்ந்து இடம்பெற்றால் மூன்றாவது ஆண்டில் அனுமதிக்கப்படாது என்று ஒரு நடைமுறையை ஒன்றிய அரசின் ஆணை தெரிவித்துள்ளது. அந்த நடைமுறையை ஒன்றிய அரசு எல்லா மாநிலங்களுக்கும் ஒரே சீராக பின்பற்றாமல் உத்தரபிரதேசம். குஜராத், ஆகிய மாநிலங்களுக்கு தொடர்ந்து மூன்றாவது முறை அனுமதித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு மட்டும் அனுமதி மறுப்பது நியாயமும் நேர்மையும் அற்ற; பாரபட்சமான செயல் என்பதை சுட்டிக்காட்டுகிறேன் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios