Asianet News TamilAsianet News Tamil

ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி - வெளியானது புதிய அறிவிப்பு...

The minimum deposit to the account holder at Bharat State Bank is Rs. It has been reduced from 5000 to 3000.
The minimum deposit to the account holder at Bharat State Bank is Rs. It has been reduced from 5000 to 3000.
Author
First Published Sep 25, 2017, 7:48 PM IST


பாரத் ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கான குறைந்த பட்ச தொகை ரூ. 5000 ஆயிரத்திலிருந்து ரூ.3000 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஓய்வூதியதாரர்கள், 18 வயதுக்கு உட்பட்டோருக்கு குறைந்த பட்ச தொகை வைத்திருப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் முதல் பெரு நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்த பட்சம் 5,000 ரூபாய், நகர்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 3,000 ரூபாய், சிறு நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.2,000 மற்றும் கிராமப்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 1,000 ரூபாயை குறைந்தபட்ச தொகையாக வைத்திருக்க வேண்டும் என எஸ்பிஐ அறிவிப்பு வெளியிட்டது. 

எவ்வளவு தொகை குறைவாக இருக்கிறதோ, அதற்கேற்ப அபராதம் விதிக்கப்படும் எனவும், குறைந்தபட்ச தொகையில் 75 சதவீதம் பற்றாக்குறை இருந்தால் 100 ரூபாய் மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும் எனவும் எஸ்பிஐ அறிவித்திருந்தது. 

இந்நிலையில், பாரத் ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கான குறைந்த பட்ச தொகை ரூ. 5000 ஆயிரத்திலிருந்து ரூ.3000 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஓய்வூதியதாரர்கள், 18 வயதுக்கு உட்பட்டோருக்கு குறைந்த பட்ச தொகை வைத்திருப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்பிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios