வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு...! மூழ்கிய தரைப்பாலம்.. போக்குவரத்திற்கு தடை
மதுரை வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தரைப்பாலம் மூழ்கியதால், ஆற்றோர சாலைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டதாகும். இந்த அணையில் தேக்கப்படும் நீரானது தேனி ,திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் மற்றும் தேனி மாவட்டம் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதாலும், கனமழை காரணமாகவும் வைகை அணையில் நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டி வருகிறது. மேலும் மதுரை, இராமநாதபுரம், மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப் பகுதிக்கு வைகை அணையில் இருந்து கடந்த 27ம் தேதி முதல் 7 மதகு கண் வழியாக விநாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் வைகை அணையில் இருந்து நேற்று காலை 11 மணியளவில் 4006 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
School Leave: விடாமல் கொட்டித்தீர்க்கும் கனமழை.. இந்த 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!
மூழ்கிய தரைப்பாலம்
இதன் காரணமாக வைகை ஆற்றின் கரையோர மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 4ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யானைக்கல் தரைப்பாலம் முழுமையாக நீரில் மூழ்கிய நிலையில் பாலத்தில் ஓரத்தில் உள்ள சாலைகளில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகிய நிலையில் நீண்ட தூரம் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை கல்லூரியில் துடிக்க, துடிக்க நாயை அடித்து கொன்ற ஊழியர்கள்...! வீடியோ வெளியாகி பரபரப்பு..
மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
ஆழ்வார்புரம் மற்றும் ஓபுளா படித்துறை பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி நீர் மதகுகள் மூலமாக வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக தடுப்பணை பகுதிக்குள் பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனிடையே வைகையாற்று பகுதி மக்கள் வைகை ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் எனவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கால்நடைகளை பாதுகாப்பாக பராமரிக்கவும், கால்நடைகளை ஆற்றில் இறக்கி விட வேண்டாம் எனவும், நீர்நிலைகளின் அருகில் கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்