ஆணையருக்கு 1 லட்சம், உதவி ஆணையருக்கு 50 ஆயிரம்.. ஆபராதம் போட்ட நீதிபதி.. ஆட்டிப்போன இந்து அறநிலையத்துறை.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலை துறை ஆணையருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கோவிலுக்கு சொந்தமான இடத்திற்கு வாடகை செலுத்தாமல் அலைக்கழித்து வந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலை துறை ஆணையருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கோவிலுக்கு சொந்தமான இடத்திற்கு வாடகை செலுத்தாமல் அலைக்கழித்து வந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் இந்து சமய அறநிலைய துறையின் செயல்பாடுகள் வேகமெடுத்துள்ளன, ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது, அதுமட்டுமின்றி கோயிலுக்கு சொந்தமான இடங்களுக்கான வாடகை பாக்கிகள் தீவிரமாக வசூலிக்கப்பட்டு வருகிறது, இது ஒருபுறம் உள்ள நிலையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிராக பாஜக, இந்து இயக்கங்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. மொத்தத்தில் இந்து சமய அறநிலைத்துறை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த துறையாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையருக்கு நீதிமன்றம் அபராதம் அறிவித்திருப்பது பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.
முழு விவரம் பின்வருமாறு:- சென்னை சூளையில் உள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்ரமணியர் திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்துள்ள தனியார் நபர்கள், நீண்டகாலமாக அதற்கான வாடகை செலுத்தாமல் இருப்பதாக அதை சூளையைசே சேர்ந்த சுகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணையின் போது அந்த குறிப்பிட்ட தனி நபர்களுக்கு எதிராக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடவடிக்கை தொடங்கப்பட்டு வருவதாக அத்துறையின் ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மேலும் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என கடந்த 2021- ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படியுங்கள்: கார் விபத்தில் சிக்கிய திமுக MLA..! கையில் முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி
ஆனால் நீதிமன்ற உத்தரவை இந்து சமய அறநிலைத்துறை அமல்படுத்தவில்லை என தெரிகிறது, இந்நிலையில்தான் மனுதாரர் சுகுமார் இந்து சமய அறநிலைத் துறை ஆணையருக்கு எதிராக மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இதற்கு அறநிலையத்துறை உதவி ஆணையர் பதில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
இதையும் படியுங்கள்: ஓபிஎஸ் உடன் மோடி, அமித் ஷா..! காஞ்சிபுரத்தில் அதிமுக நிர்வாகிகளால் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு
அதில், கோவில் சொத்தை குத்தகைக்கு எடுக்க தனி நபர்களுக்கு எதிரான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது எனவும், எனவே தங்களுக்கு நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு ஏன் காலதாமதம், காலதாமதம் ஏற்பட்டதற்கான காரணங்கள் என்ன என்பதை உதவி ஆணையர் தனது அறிக்கையின் தெரிவிக்க வில்லை என்றும்,
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது குறித்து உதவி ஆணையர் வருத்தம்கூட தெரிவிக்கவில்லை என்றும், இது போன்ற மெத்தனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறிய நீதிபதி, இந்து சமய அறநிலைத் துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாயும், அதேபோல் உதவி ஆணையருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்தத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.