மாடுகள் விறபனைக்கான கட்டுப்பாடுகளை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மத்திய அரசின் உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடையை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என நாடு முழுவதும் கடந்த மே மாதம் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு மத்திய அரசின் இந்த உத்தரவு தனிமனித உரிமையை பறிக்கும் செயல் என கூறி நீதிமன்றங்களில் வழக்குகள் குவிந்த வண்ணம் இருந்தன.

அதன்படி மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் செல்வகோமதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த மே 30 ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாடுகள் விறபனைக்கான கட்டுப்பாடுகளுக்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் ஒருவாரத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.