Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் இரண்டு தினங்களில் மிக கன மழை.! புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரும் தாழ்வு பகுதி- வானிலை ஆய்வு மையம்

இலங்கை கடல் பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

The India Meteorological Department has said that there is a possibility of very heavy rain in Tamil Nadu for the next 2 days
Author
First Published Nov 8, 2022, 9:28 AM IST

தமிழகத்திற்கு கன மழை

வட கிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. இந்தநிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு,கன்னியாகுமரி, மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 2 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓபிஎஸ் அணிக்கு புதிதாக மாநில நிர்வாகிகள், கொள்கை பரப்புச் செயலாளர்கள் நியமனம்..! யார், யார் தெரியுமா.?

The India Meteorological Department has said that there is a possibility of very heavy rain in Tamil Nadu for the next 2 days

புதுவையை நோக்கி நகரும் தாழ்வு பகுதி

இதனிடையே  இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இலங்கை கடல் பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 10ஆம் தேதி கனமழையும், 11மற்றும் 12ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

கைது செய்யப்பட்ட தமிழக மாலுமிகள்… மீட்கக்கோரி மத்திய, மாநில அரசிடம் அவர்களின் குடும்பங்கள் வேண்டுகோள்!!

Follow Us:
Download App:
  • android
  • ios