The Income Tax Department has frozen assets owned by Health Minister Vijayabaskar.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர் கீதாலட்சுமி, மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் ஆர்.கே.நகரில் பணபட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களும் அடங்கும்.
இதையடுத்து, விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா, அவரின் தந்தை ஆகியொரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தியது.
மேலும் விஜயபாஸ்கர் தந்தையின் கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதிலும் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியதாக தெரிகிறது.
இதைதொடர்ந்து விஜயபாஸ்கர், அவரது தந்தை, மனைவி, சகோதரர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சொத்துக்களை வருமான வரித்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.
மேலும் விஜயபாஸ்கரின் சொந்த ஊரான திருவேங்கை வாசலில் உள்ள அவரது 100 ஏக்கர் நிலமும், குவாரியும் முடக்க புதுக்கோட்டை மாவட்ட நில பதிவாளருக்கு வருமான வரித்துறை கடிதம் எழுதியுள்ளது.
