ரயிலை கவிழ்க்க சதியா.? திருப்பத்தூரில் தண்டவாளத்தில் பெரிய கற்களை வைத்தது யார்.? போலீஸ் விசாரணை தீவிரம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் மிகப்பெரிய கற்கள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கற்களை வைத்த நபரை மோப்ப நாய் உதவியோடு ரயில்வே போலீசார் விசாரணை
ரயிலை கவிழ்க்க சதி.?
ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கிய நிலையில் இந்த விபத்தில் 290க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மறைவதற்குள் நாடு முழுவதும் அங்காங்கே ரயில் விபத்துகள் தொடர்ந்து கொண்டு உள்ளது. இன்று அதிகாலையில் கூட மேற்குவங்க மாநிலம் பகுதியில் ஒடிசா ரயில் விபத்தை போன்று இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளது. இந்த விபத்தில் 8க்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டது. இந்தநிலையில் தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ரயில் தண்டவளாத்தில் மிகப்பெரிய கற்கள் இருந்தது தெரியவந்தது.
தண்டவாளத்தில் கற்கள்
காட்பாடி, ஜோலார்பேட்டை இந்த வழித்தடம் வழியாக தினுமும் 120 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, பெங்களூர், கேரளா மற்றும் கோவை, சேலம் பகுதிகளை இணைக்கும் முக்கிய ரெயில்வே பாதையாக இது உள்ளது. இந்தநிலையில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. அப்போது ஆம்பூர் அருகில் உள்ள பச்சை குப்பம் பகுதியில் ரயில் தண்டவளாத்தில் கான்கீரிட் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரயில் ஓட்டுநர் பிரேக் அடிக்க முடித்துள்ளார். ஆனால் உடனடியாக பிரேக் அடிக்க முடியாததால் கற்கள் மீது ரயில் ஏறியது. இதனல் பலத்த சத்தம் ஏற்பட்டது. ரயிலின் வேகத்தால் கற்கள் தூள் தூளாக சிதறியது.
கற்களை வைத்தது யார்.?
இதனையடுத்து அருகில் உள்ள பச்சை குப்பம் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்திய ஓட்டுநர் போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் காரணமாக சுமார் 20 நிமிடங்கள் ரயில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பச்சக்குப்பம் பகுதியில் சோதனை நடத்தினர். ஏற்கனவே திருச்சி பகுதியில் ரயில் தண்டவளாத்தில் லாரி டயர் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ரயிலை கவிழ்க்க நடைபெற்ற சதி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்