Asianet News TamilAsianet News Tamil

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள்.. வழக்கு பதிவு செய்த போலீஸ்

கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக  மீனவர்கள் மீது கடற்கொள்ளையார்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The incident of pirates attacking a Tamil Nadu fisherman has created a stir
Author
First Published Nov 5, 2023, 1:14 PM IST | Last Updated Nov 5, 2023, 1:14 PM IST

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் மீனவர்கள் மீது  தாக்குதல் நடத்தி பொருட்களை கொள்ளையடிக்கும் செயல்களும் நீடிக்கிறது. இந்தநிலையில் நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தரங்கம்பாடி புதுப்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார்,மதன், சிவக்குமார்,நித்திய குமார் ஆகியோர் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

The incident of pirates attacking a Tamil Nadu fisherman has created a stir

  கோடியகரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது 3 இலங்கை கடற்கொள்ளையர்கள் மூங்கில் கட்டையால் மீனவர்களை தாக்கி படகில் இருந்த ஐஸ் பெட்டி, ஜிபிஎஸ் கருவி,  செல்ஃபோன், மீன்பிடி வலைகள்  போன்றவற்றை அபகரித்துக் கொண்டு மீனவர்களை விரட்டி அடித்தனர்.

மேலும் காயம் அடைந்த மீனவர்கள் வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பாக  கடற்கொள்ளையர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios