அசல் உரிமம் வைத்திருப்பது மிகவும் இடையூறல்களை உருவாக்கும் எனவும் அசல் உரிமம் வைத்திருக்குமாறு செப்டம்பர் 5 ஆம் தேதி வரை கட்டாயப்படுத்த கூடாது எனவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வாகன ஓட்டிகள் அனைவரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தங்களது ஒரிஜினல் ஓட்டுனர் உரிமத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ரூ.500 அபராதம், 3 மாத சிறைத் தண்டனை ஆகிய இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. 

இதை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதுகுறித்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதி துரைசாமி இந்த வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என பரிந்துரை செய்தார். 

அசல் உரிமம் வைத்திருப்பது மிகவும் இடையூறல்களை உருவாக்கும் எனவும் அசல் உரிமம் வைத்திருக்குமாறு செப்டம்பர் 5 ஆம் தேதி வரை கட்டாயப்படுத்த கூடாது எனவும், நீதிபதி உத்தரவிட்டார்.