வாணியம்பாடி அருகே காவல் நிலையம் முன்பு பெண் 3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சொர்க்கல்நத்தம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி அமிர்தசெல்வி  நிலத்தகராறு தொடர்பாக  கடந்த 6 மாதங்களுக்கு முண் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் காவல்துறையினர் அந்த புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மணமுடைந்த அமிர்தசெல்வி  இன்று காலை தனது மூன்று  குழந்தைகளுடன் சென்ற அமிர்தசெல்வி காவல் நிலையம்  முன்பு மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார் இதை பார்த்த அதும் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து தடுத்து நிறுத்தினர்.

பெண் ஒருவர் காவல்நிலையம் முன்பு தனது குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.