கோவை காட்டுப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ..! ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்
கோவை மாவட்டம் ஆலந்துறையில் 5 நாட்களுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ பற்றி எரியும் நிலையில் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
கோவையில் காட்டுத் தீ
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் பல இடங்களில் காட்டுத் தீ உருவாகியுள்ளது. இந்தநிலையில், கோவை மாவட்டம் ஆலந்துறை கிராமத்திற்குட்பட்ட, ரங்கசாமி கோயில் சராகம் வன மலையில் காட்டுத் தீயானது வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக காடுகளில் உள்ள மரங்களானது சாம்பலாகி வருகிறது.
மேலும் அரிய வகை மூலிகை மரங்களும் காட்டுத் தீயால் எரிந்துள்ளது. விலங்குகளும் காட்டுத்தீயில் இருந்து தப்பிக்க இடம்பெயர்ந்து வருகிறது. கடந்த 11 ஆம் தேதி ஏற்பட்ட காட்டு தீயானது 10 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு பரவியது. வனத்தில் மூங்கில் மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், சருகுகள் போன்றவற்றின் மூலம் தீ ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக பரவியதாக வனத்துறை தெரிவித்துள்ளனர். மேலும் சுமார் 80 ஹெக்ட்டேர் பரப்பு தீயில் எரிந்து காடுகள் நாசமாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக உடன் கூட்டணியா.? தனித்து போட்டியா.? செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி முக்கிய முடிவு
ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க முயற்சி
இந்தநிலையில் சுமார் 150 க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள், மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ தடுப்பு கோடுகள் அமைத்தும், கிளைகளை வைத்து அடித்தும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்றைய தினத்தில் பெரும்பாலான இடங்களில் காட்டுத் தீயானது அணைக்கப்பட்டது. மனிதர்களால் எளிதில் செல்ல முடியாத இடங்களில் ஏ்றபட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்த இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தீ அணைக்கும் பணிகள் தொடங்கி உள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் தீயின் மீது தண்ணீ் ஊற்றி அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை ஏராளமான மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
இந்தியாவில் இரண்டாவது நாளாக குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு..! நிம்மதி அடையும் பொதுமக்கள்