இந்தியாவில் இரண்டாவது நாளாக குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு..! நிம்மதி அடையும் பொதுமக்கள்
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10ஆயிரத்து 93 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நேற்றைய பாதிப்பை விட இன்றைய தொற்று விகிதம் குறைந்திருப்பது மக்களை நிம்மதி அடையவைத்துள்ளது.
10ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் அச்சுறுத்தி லட்சக்கணக்கானோரின் உயிரை பலி வாங்கியது. இந்த நிலையில் கடந்த ஓராண்டாக கொரோனா பாதிப்பு குறைந்து மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்த கால கட்டத்தில் மேலும் கொரோனா தீவிரம் அடைந்து வருவது மக்களை அச்சமடையவைத்தது, இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 10,753- ஆக இருந்த நிலையில் இன்று பாதிப்பு சற்று சரிந்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவிற்கு மேலும் 23 பேர் பலியாகியுள்ளனர்.
அவர பெரிய ஆள் ஆக்காதீங்க.. அண்ணாமலை பற்றி என்கிட்ட கேட்காதீங்க - கடுப்பான இபிஎஸ்
தமிழகத்தில் 500பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 53,720-ல் இருந்து 57,742- ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் அதிகமாக கேரளா, உத்தரப்பிரதேசம், ஹரியான, தமிழ்நாடு டெல்லி, ராஜஸ்தானில் ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக பரவிவருகிறது. இது வரும் நாட்களில் குறைய வாய்ப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரே நாளில் 5,759 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 502 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதித்து 3,048 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே கொரோனா பரவலில் இருந்து பொதுமக்கள் தற்காத்து கொள்ள முக்கவசம் அணியும் படி மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
பாஜக உடன் கூட்டணியா.? தனித்து போட்டியா.? செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி முக்கிய முடிவு