கோவில்களில் கடவுளுக்கு மட்டுமே முதல் மரியாதை, மனிதர்களுக்கு அல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. 

கோவில்களில் கடவுளுக்கு மட்டுமே முதல் மரியாதை, மனிதர்களுக்கு அல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள வடவன்பட்டி சண்டிவீரன் கோவிலில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக்கூடாது என சேதுபதி என்பவர், உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார்,” ஜாதி அடிப்படையில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. கோவிலில், முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே. மனிதர்களுக்கு அல்ல. கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கப்படவில்லை என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் படிக்க: அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தண்ணீர் பஞ்சம்.. லஞ்சம் வாங்குபவர்களுக்கு ஊதியம் எதற்கு..?உயர்நீதிமன்றம் சாடல்