Asianet News TamilAsianet News Tamil

தீவிரம் அடையும் கன மழை.. மீட்பு பணி கோரி ஒரே நாளில் தீயணைப்பு துறைக்கு வந்த இத்தனை அழைப்புகளா.?

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மழைக்கால அவசர உதவி வேண்டி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரே நாளில் 258 அவசர அழைப்புகள் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

The fire department reported that more than 250 emergency calls were received due to rain damage KAK
Author
First Published Nov 15, 2023, 9:58 AM IST | Last Updated Nov 15, 2023, 9:58 AM IST

தொடர் கன மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்களுக்கு உதவி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

அதன் படி காவல்துறை சார்பில் காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகம் முழுவதும் மழைக்கால அவசர உதவிக்காக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை கட்டுப்பாட்டை நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று நள்ளிரவு 12 மணி வரை 258 அவசர அழைப்புகள் வந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

The fire department reported that more than 250 emergency calls were received due to rain damage KAK

அவசர கட்டுப்பாட்டு மைய அழைப்பு

அதேபோல் இந்த 258 அவசர அழைப்புகளில் 23 அழைப்புகள் தீ விபத்து தொடர்பாக வந்ததாகவும் அதே போல் மீதமுள்ள 235 அழைப்புகள் மழைக்காலத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்வதற்காக பொதுமக்களிடமிருந்து வரப்பட்ட அவசர அழைப்புகள் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த 23 தீ விபத்து தொடர்பான அவசர அழைப்புகளில் இரண்டு அழைப்புகள் மிகவும் பெரிய அளவில் ஏற்பட்ட தீ விபத்துகள் எனவும் அந்த தீ விபத்துக்கள் நாமக்கல் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் நடைபெற்ற இருப்பதாகவும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 6 மாவட்டங்களில் பிச்சு உதற போகுதாம் மிக கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios