சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மொட்டை மாடியில் உள்ள ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சிபிசிஐடி அலுவலகத்தில் தீ விபத்து
சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் தற்போது சிபிசிஐடி அலுவலகம் போலீஸ் அருங்காட்சியகம் சீருடை பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று காலை வழக்கம் போல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். அப்போது அலுவக கட்டிடத்தில் மாடியில் தீயானது பற்றி எரிந்தது. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அந்த இடத்தில் இருந்து வேகமாக வெளியேறினர். இதனையடுத்து காவல்துறையினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர்.
அலறி ஓடிய ஊழியர்கள்
அதற்குள் கட்டிடத்தில் இருந்த காவல்துறையினர் அலுவலக மாடியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். மொட்டை மாடியில் உள்ள ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீவிபத்துல் எந்த வித ஆவணங்களும் பாதிக்கப்படவில்லையென முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இருந்த போதும் இது குறித்து எழும்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் தீ அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் அங்கு இருந்த மின்சாதன பொருட்களை அகற்றி முழுமையாக தீயை அணைத்தனர்.
இதையும் படியுங்கள்
