ஆக்சிஸ் வங்கியில் 66 கோடியே 93 லட்சம் பண மோசடி வழக்கில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவன அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சரவணா ஸ்டோர் மீது முறைகேடு் புகார்

சென்னையில் இயங்கி வந்த சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு இந்தியன் வங்கியில் ரூ.235 கோடி கடன் பெற்றுள்ளது. கடனை முறைகேடாக பண பரிமாற்றம் செய்த்தாக சிபிஐயில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து விசாரணைக்கு பிறகு அந்நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.234 கோடியே 75 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளை கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறை முடக்கியது. 

கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது பயங்கர விபத்து.. 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. 6 பேர் படுகாயம்.!

சொத்துக்களை முடக்கிய அமலாக்க துறை

இதனை தொடர்ந்து தற்போது தனியார் வங்கியை ஏமாற்றி சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனம் மீது மீண்டும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து சென்னையில் அந்நிறுவனத்துக்கு சொந்தமாக உள்ள ரூ.66.93 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை நேற்று அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

ரெட் அலர்ட் எச்சரிக்கை..! தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! ராமேஸ்வரம் ரயில்கள் ரத்து