Asianet News TamilAsianet News Tamil

ரெட் அலர்ட் எச்சரிக்கை..! தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! ராமேஸ்வரம் ரயில்கள் ரத்து

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பலன் பாலத்தில் அதிக அளவிலான காற்று வீசி வருவதாலும், தொழில்நுட்ப பிரச்சனை காரணமாகவும்  ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Train services at Pampan Bridge have been suspended due to depression
Author
First Published Dec 23, 2022, 9:31 AM IST

தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு வேகம் குறைந்து தொடர்ந்து  வடமேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய இடங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

பாஜகவில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர்? வெளியான பரபரப்பு தகவல்!!

Train services at Pampan Bridge have been suspended due to depression

ரயில் சேவை ரத்து

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வானிலை மையம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், பாம்பன் பாலத்தில் இயக்கப்படும் ரயில் சேவை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,  ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கும் இன்று இயக்கவிருந்த ரயில் சேவையானது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல சென்னையில் இருந்து ராமேஸ்வரம் ரயில் சேவையில் மண்டபம் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் ரயில் சேவையும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

அச்சுறுத்தும் கொரோனா.! தடுப்பூசி கையிருப்பில் இல்லை.! தயார் நிலையில் தமிழக அரசு..!- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Follow Us:
Download App:
  • android
  • ios