The doctor arrested for enjoying pornographic videos Video
மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த பெண்களை டாக்டர் ஆடைகளை கழற்றி ரகசியமாக வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்த சம்பவம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மயிலாப்பூர் லோகநாதன் தெருவை சேர்ந்த டாக்டர் சிவகுருநாதன், மயிலாப்பூர் நாட்டுசுப்பராயன் தெருவில் ஆர்.எம்.கிளினிக் என்ற மருத்துவமனை நடத்தி வருகிறார். பெண்களுக்கான சிறப்பு டாக்டர் என்பதால் அப்பகுதியில் கைராசி டாக்டர் என்று பெயர் எடுத்தவர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் நெஞ்சுவலி காரணமாக சிவகுருநாதனிடம் சிகிச்சைக்கு வந்துள்ளனர். அப்போது சிவகுருநாதன், இரண்டு குழந்தைகளையும் வெளியே அனுப்பிவிட்டு, பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு, அந்த பெண்ணை மட்டும் தனி அறைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு தெரியாமல் அறையில் தனது செல்போனை ஆன் செய்து வீடியோ எடுத்துள்ளார்.
அப்போது, அந்த பெண்ணின் மேல் ஆடைகளை கழற்றி ஸ்டெதஸ்கோப் உதவியுடன் பரிசோதனை செய்வது போல் நடித்துள்ளார். அந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக சிகிச்சைக்கு வந்த நபர் ஒருவர் திடீரென டாக்டரை தேடி அறைக்குள் நுழைந்துவிட்டார். அப்போது, மருத்துவர் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் தவறாக நடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து வெளியே ஓடி வந்துவிட்டார். பின்னர், அரை மணி நேரம் கழித்து மருத்துவர் மற்றும் சிகிச்சைக்கு வந்த பெண் வெளியே வந்தனர். அப்போது அந்த பெண்ணிடம், ‘‘உள்ளே என்ன நடந்தது’’ என்று வெளியில் காத்திருந்த நபர் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், ‘‘அவர் டாகடர் போல நடந்து கொள்ளவில்லை’’ என்று கூறி கதறி அழுதுள்ளார். உடனே அந்த நபர் மருத்துவரிடம் சென்று சம்பவம் குறித்து கேட்டதற்கு டாக்டர், ‘‘இது வெறும் சிகிச்சைதான். இதை நீங்கள் தப்பா எடுத்துக்க கூடாது’’ என்று கிண்டலாக கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், டாக்டரின் செல்போனை பறித்து பார்த்துள்ளார். அப்போது அதில் சிகிச்சைக்கு வந்த ஏராளமான பெண்களிடம் இதுபோல தவறாக நடந்தது வெளிச்சமாகியுள்ளது. உடனே டாக்டர் அந்த செல்போனை பிடுங்கி அதில் இருந்த மெமரி கார்டை எடுத்து உடைத்து வெளியே வீசிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மற்றும் நேரில் பார்த்த நபர் இருவரும் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்படி, போலீசார் டாக்டர் சிவகுருநாதனை பிடித்து அவரின் இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்து ஆராய்ந்தனர். அப்போது, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த ஒரு இளம்பெண் உட்பட இரண்டு பெண்களை சிகிச்சை என்ற பெயரில் ஆடைகளை கழற்ற சொல்லி அவர்களிடம் தவறாக நடக்கும் வீடியோ காட்சி இருந்துள்ளது.
இதனையடுத்து டாக்டரிடம் போலீசாரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, “டாக்டர் சிவகுருநாதன் சிகிச்சைக்கு வரும் பெண்களில் அழகான பெண்களின் மன நிலைப்படி அவர்களுக்கு தெரியாமல் தனது செல்போனை சிகிச்சை அறையில் ஆன் செய்து வைத்து விட்டு, அவர்களிடம் சிகிச்சை என்ற பெயரில் தகாத முறையில் நடப்பது. மீண்டும் அந்த பெண்ணை சிகிச்சைக்கு வர வேண்டும் என்று கூறி அனுப்பி விடுவார். அதேபோல அந்த பெண்கள் மறுபடியும் சிகிச்சைக்கு வரும் போது, முதல் நாள் எடுத்த வீடியோவை அந்த பெண்களிடம் காட்டி மருத்துவமனையில் உள்ள அறையிலேயே உல்லாசம் அனுபத்து வந்துள்ளார். இதனால் பல பெண்கள் இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் நமக்குதான் பிரச்னை என்று மூடி மறைத்துள்ளனர். பெண்களின் மனநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட டாக்டர் சிவகுருநாதன் பல ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை படம் பிடித்து மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார், மேலும் தான் உல்லாசம் அனுபவிக்கும் சமயத்திலும் அதை வீடியோ எடுத்து வைத்துள்ளாராம். அதுமட்டுமல்ல, பெண்களை ஆபாசமாக எடுத்த வீடியோவை தனிமையில் இருக்கும் போது பார்த்து ரசிக்கும் பழக்கம் உடையவர் காமுகன் என தெரியவந்துள்ளது.
இதுபோல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்கு வந்த பெண் ஒருவரிடம் தவறாக நடந்தபோது அந்த பெண் தனது கணவரிடம் சொல்லி கதறி அழுததால், உடனே அந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து டாக்டரை சரமாரியாக அடித்துவிட்டு எச்சரித்துள்ளனர். ஆனால், அப்போது அவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்யவில்லை. அதன் பிறகு சிகிச்சைக்கு வரும் பெண்களின் மன நிலைப்படிதான் அவர்களை வீடியோ எடுத்து உல்லாசமாக இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த காமக் கொடூர டாக்டர் சிவகுருநாதன் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டம், அடுத்தவரின் அனுமதியன்றி படம் எடுத்தல், மறைந்து ஆபாசமாக படம் எடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
