சென்னைக்கு கொண்டுவரப்பட்ட மூளை திசு பகுதி..! சைதை துரைசாமியின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போனதா.? வெளியான தகவல்
சட்லெஜ் ஆற்றில் வெற்றி துரைச்சாமி சென்ற கார் விழுந்து விபத்துக்குள்ளாகி 8 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை வெற்றி துரைசாமியின் நிலை என்னவென் தெரியாத நிலையில், விபத்து பகுதியில் கைப்பற்ற மூளை திசு பகுதி டிஎன்ஏ சோதனைக்காக சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மாயமான வெற்றி துரைசாமி
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைச்சாமி பட இயக்குனநாக உள்ளார். கடந்த வாரம் ஹிமாச்சல் பிரதேசத்தில் பல இடங்களில் படத்திற்காக இடம் தேர்வு செய்ய தனது உதவியாளருடன் சென்றிருந்தார். அங்கு இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சட்லெஜ் ஆறு வழியாக விமான நிலையம் திரும்பும் போது கார் விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், வெற்றி துரைசாமியின் உதவியாளர் பலத்த காயத்தோடு மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே வெற்றி துரைசாமியின் நிலை என்னவென்று தெரியாமல் உள்ளது.
பலனளிக்காத தேடுதல் பணி
தேடும் இதனையடுத்து சட்லெஜ் ஆறு பகுதியில் தேடும் பணியானது தொடர்ந்து நடைபெற்றது. இதில் வெற்றி துரைசாமியின் செல்போன் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்பட்டது. ஆனால் வெற்றி துரைசாமியின் நிலை என்னவென தெரியாமல் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர். மேலும் வெற்றி துரைசாமியின் உடல் எடை அளவு கொண்ட பொம்மையை தூக்கி எரிந்து அந்த பொம்மை எந்த பகுதிக்கு செல்கிறது என சோதனை செய்து பார்த்தனர்.
இருந்த போதும் இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தநிலையில் விபத்து நடைபெற்ற பகுதியில் மனித மூளை பகுதி கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த மூளை யாருடையது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மூளை திசு பகுதியின் ரத்த மாதிரி சேகரித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்று டிஎன்ஏ சோதனை முடிவு.?
இதன் பிறகு சைதை துரைசாமி மற்றும் அவரது மனைவியின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஹிமாச்சல் பிரதேசத்தில் கொண்டு வரப்பட்ட ரத்த மாதிரியோடு ஒப்பிட்டு பார்க்க திட்டமிடப்பட்டது. நேற்று இரவு சைதை துரைசாமி மற்றும் மனைவியிடம் ரத்த மாதிரி எடுக்க அவரது வீட்டிற்கு மருத்துவ குழுவினர் சென்றனர். ரத்தி மாதிரிகள் எடுக்கப்பட்ட நிலையில் இன்று பரிசோதனை முடிவு தெரியவரும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
செந்தில் பாலாஜியை சிறையில் அடைக்க காரணம் என்ன,? பாஜகவின் திட்டம் இது தான்.! தயாநிதிமாறன் அதிரடி