சிபிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்- தனியார் பள்ளி இயக்குனர் அதிரடி உத்தரவு
2024 - 2025 கல்வியாண்டில் சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் பயின்று வரும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தை கட்டாயமாக எழுத வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் மொழி கட்டாயம்
தமிழகத்தில் தமிழ் மொழி பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு பள்ளி உட்பட தனியார் பள்ளிகளில் தமிழ் மொழி பாடத்தை ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலைய்ல் ஒரு சில பள்ளிகளில் தமிழ் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்சி உள்ளிட்ட அனைத்திலும் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து தனியார் பள்ளிகளும் மாநில பாடத்திட்டத்தில் தமிழ் பாடத்தை கற்பிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் பள்ளி இயக்குனரகம் வெளியிட்ட சுற்றறிக்கையில்,
தமிழில் 10ஆம் வகுப்பு தேர்வு
தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக்க வேண்டும் என தமிழக அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், தனியார் பள்ளிகள் தமிழை கட்டாய பாடமாக்க மறுத்து காலம் தாழ்த்தி வந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்கி மீண்டும் அரசு உத்தரவிட்டு இருந்தது. மேலும் 2015 ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் ஆண்டு ரீதியாக தமிழ் பாடத்தை கற்று வரவேண்டும் என்கிற ரீதியில் அந்த உத்தரவானது வெளியிடப்பட்டது. தற்போது, அவர்கள் பத்தாம் வகுப்பை எட்டி உள்ள நிலையில் இந்த ஆண்டு கண்டிப்பாக பொது தேர்வில் அனைத்து தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் தமிழ் பாடத்தை எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களை நியமனம் செய்திடுக
அவர்களுக்கென தனியார் பள்ளிகள் முறையான பாடத்திட்டத்தை தயார் செய்து ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தற்போது தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இந்த ஆண்டு 2023 - 2024 சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட அனைத்து வகை கல்வி முறையிலும் பயின்று வரும் மாணவர்கள் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தை கட்டாயமாக எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்