பொதிகை ரயில் இன்ஜினில் தொங்கிக் கொண்டு வந்த மனித உடல்..! மதுரை ரயில் நிலையத்தில் அலறியடித்து ஓடிய பயணிகள்
மதுரை ரயில் நிலையத்திற்குள் வந்த பொதிகை எக்ஸ்பிரசில் தொடங்கி கொண்டு வந்த மனித உடலால், ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் அலறி அடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதிகை ரயிலில் அதிரச்சி சம்பவம்
சென்னையில் இருந்து செங்கோட்டைக்கும், செங்கோட்டையில் இருந்து சென்னைக்கும் பொதிகை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் பொதிகை ரயில் முக்கியமானது. இந்தநிலையில் நேற்று இரவு செங்கோட்டையில் இருந்து மாலை ரயில் புறப்பட்டு வழக்கம் போல் இரவு 9.30 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது.
அப்போது ஏராளமான பயணிகள் ரயில் உள்ளே வரும் பொழுது ரயில் பெட்டியில் இருக்கையை பிடிக்க போட்டா போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்., ரயில் என்ஜின் உள்ளே நுழைந்ததும் ரயிலை பார்த்து பயணிகள் அலறி அடித்து ஓட ஆரம்பித்தனர். என்ன ஏதுவென புரியாமல் ரயில் இன்ஜின் ஓட்டுநர் ஒரு சில நிமிடங்கள் குழப்பம் அடைந்தார்.
தொங்கி கொண்டு வந்த மனித உடல்
அப்போது அங்கிருந்த ஒருசில பயணிகளும், ரயில்வே போலீசாரும் ரயில் இன்ஜினின் முன் பகுதியில் மனித உடல் ஒன்று சிக்கிக்கொண்டு இருப்பதை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு ரயில் இன்ஜினில் தொடங்கிக்கொண்டு வந்த மனித உடல் அகற்றப்பட்டது. செங்கோட்டையில் இருந்து மதுரை வரும் வழியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபரோ அல்லது
தற்கொலைக்கு முயன்ற நபரோ ரயில் என்ஜினில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், இறந்த நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மதுரை ரயில் நிலையத்தில் சுமார் 45 நிமிடங்கள் ரயில் நிறுத்தப்பட்டது.
இதையும் படியுங்கள்