5ஜியை தொட்ட நீ கெட்ட.. தூள்ளி குதித்து வந்து 2ஜி வழக்கை தூசு தட்டிய சிபிஐ.. ஆ.ராசவுக்கு எதிராக முறையீடு

5ஜி அலைக்கற்றையில் ஏலத்தில் முறைகேடு நடைபெற்றதாக ஆ.ராசா புகார் கூறிய நிலையில், 2ஜி வழக்கை தினந்தோறும் விசாரிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டுள்ளது.
 

The CBI has appealed to the Delhi court seeking daily investigation of the 2G case

2 ஜி வழக்கும் ஆ.ராசா கைதும்

கடந்த 2010ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய  தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் அறிக்கை வெளியிட்டார். இதனையடுத்து நாடு முழுவதும் 1.76 லட்சம் கோடி ஊழல் என செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநியின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசாவையும் கைது செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் இந்த வழக்கு நாடு முழுவதும் பரபரப்பானது. இதனையடுத்து  இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எந்த வருவாய் இழப்பும் ஏற்பட்டதற்கு ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

மோடியின் கோரிக்கையை ஏற்ற எடப்பாடி பழனிசாமி...! அதிமுக தொண்டர்களுக்கு திடீர் உத்தரவிட்ட இபிஎஸ்

The CBI has appealed to the Delhi court seeking daily investigation of the 2G case

5ஜி ஏலத்தில் முறைகேடு

இந்த நிலையில், மத்திய அரசு 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்கான ஏலம் நடைபெற்றது. இந்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில்  சுமார் 5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் போகும் என அரசு எதிர்பார்த்த நிலையில், வெறும் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கே ஏலம் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து 5 ஜி ஏலத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் கூறப்பட்டிருந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறுகையில், 51 ஜிகா ஹெட்ஸ் கொண்ட 5ஜி அலைக்கற்றை குறைவான தொகைக்கு விற்கப்பட்டு மிக பெரிய மோசடி நடந்துள்ளது. இது யாருக்காக செய்யப்பட்டது? எவ்வளவு மோசடி நடந்துள்ளது ? என இந்த அரசு விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் இப்போதைய அரசு தூக்கி எறியப்பட்டு புதிய அரசு அமைந்தவுடன் அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தார். 

குடியரசு தலைவர் விருது வேண்டுமா..? ரூ.2லட்சம் தந்தால் விருது...கோவையில் மோசடி மன்னன் கைது..சிக்கியது எப்படி.?

The CBI has appealed to the Delhi court seeking daily investigation of the 2G case

2ஜி வழக்கை தினமும் விசாரிக்க வேண்டும்

இந்த பரபரப்புக்கு மத்தியில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ சார்பாக புதிய கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், 2 ஜி வழக்கை தினசரி விசாரணை அடிப்படையில் வாதங்கள் வைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தினசரி விசாரிக்க முடியாத பட்சத்தில் சிறப்பு பென்ச் உருவாக்க வேண்டும் வலியுறுத்தியது.மேலும் இது மிக முக்கியமான வழக்கு என தெரிவித்த சிபிஐ  இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் வெளியே கொடுக்கும் பேட்டிகள், வாதங்கள் மத்திய அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக சிபை கூறியது. அப்போது 2 ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், சிபிஐ இதில் பாரபட்சமாக செயல்படுகிறது. தினசரி விசாரணை, விரைவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோருவது தவறு என்று வாதிட்டார். வாதங்களை கேட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி,சிபிஐ முறையீடு தொடர்பாக உடனடியாக விசாரிக்க முடியாது என தெரிவித்த நீதிபதி, செப்டம்பர் 22,23 ஆம் தேதியில் 2 ஜி வழக்கை தினசரி விசாரிப்பது தொடர்பாக முடிவு செய்வோம் என கூறினார்.

இதையும் படியுங்கள்

சென்னையில் முன்னாள்,இன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனையா..? 47 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையால் பரபரப்பு

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios