குடியரசு தலைவர் விருது வேண்டுமா..? ரூ.2லட்சம் தந்தால் விருது...கோவையில் மோசடி மன்னன் கைது..சிக்கியது எப்படி.?
யூனிசெஃப் என்ற சர்வதேச அமைப்பை போன்றே யுனிசெஃப் இண்டர்நேசனல் கவுன்சில் என்ற பெயரில் அமைப்பை தொடங்கி விருது தருவாதக கூறி பல கோடி மோசடி செய்த நபரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
குடியரசு தலைவர் விருது மோசடி
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும், மக்கள் சேவை ஆற்றுபவர்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக விருது வழங்கி கவுரவப்படுத்தப்படும் . ஆனால் சில விளம்பர விரும்பிகள் பணம் கொடுத்து விருதுகளை வாங்க முயல்வார்கள் அவர்களை ஏமாற்றுவதற்காகவே பல போலியான பெயரில் பல்கலைக்கழகங்கள் உருவாக்கி டாக்டர் பட்டமும் விருதுகளும் வழங்குவார்கள். அப்படி விருது வழங்கிய ஒருவரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை புதூரில் வசிக்கும் பிரபு, இண்டர்நேசனல் யுனிசெஃப் கவுன்சில் என்ற அமைப்பினை நடத்தி வருகின்றார். சர்வதேச யுனிசெப்க்கும் இந்த அமைப்புக்கும் சம்மந்தமே இல்லையென்றாலும் தன்னை பெரிய அளவில் பொதுவெளியில் பிரபலமானவர்போல் பிரபு காட்டியுள்ளார். இவர் நடத்துகின்ற அமைப்பின் பெயரில் தனிநபர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டங்களையும் தந்துள்ளார். இந்த நிலையில் தொழில் அதிபர்கள், சமூக செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு குடியரசு தலைவர் ஜன சேவா புஸ்கர் விருது , முதல்வரிடம் மற்றும் கவர்னர் மாளிகையில் சமுக சேவகர் விருதுகளை வாங்கி தருவதாக தெரிவித்து ஏராளமானோரிடம் பிரபு நன்கொடை பெற்றிருக்கின்றார். குடியரசு தலைவர் விருதுக்கு 2 லட்சம் ரூபாய் என 6 பேரிடம் வசூலித்துள்ளார்.
பள்ளி மாணவர்களை குறி வைக்கும் போதை கும்பல்.! நூதன முறையில் கஞ்சா விற்பனை... அதிர்ச்சியில் போலீஸ்
பல கோடி மோசடி மன்னன் கைது
இந்த நிலையில் பிரபுவிடம் பணம் கொடுத்தவர்கள் விருது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் பிரபு கடந்த ஒரு வருடமாக எந்த வித பதிலும் அளிக்கவில்லை மேலும், விருதும் வழங்கவில்லை. முன்னுக்கு பின் முரக பதிலும் அளித்துள்ளார். இதனால் சுதாரித்துக்கொண்டவர்கள் பிரபு ஏமாற்று பேர்வழி என்பதனை தெரிந்துகொண்டுள்ளனர். இதனையடுத்து கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் பிரபு மீது பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் குனியமுத்தூர் போலீஸார் பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மக்கள் சேவைக்காக விருதுகள் தேடி வர வேண்டும் ஆனால் வெட்டி பந்தாவிற்காக பணம் கொடுத்து விருது பெற நினைத்தால் இது போல ஏமாறும் நிலை தான் உருவாகும்
இதையும் படியுங்கள்
மின்னல் வேகத்தில் வந்த கார்...! பொதுமக்கள் மீது மோதி தூக்கி வீசப்பட்டதில் 3 பேர் துடி துடித்து பலி