பள்ளி மாணவர்களை குறி வைக்கும் போதை கும்பல்.! நூதன முறையில் கஞ்சா விற்பனை... அதிர்ச்சியில் போலீஸ்
கோவை பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு சாக்லெட் பாக்கெட்களில் கஞ்சாவை வைத்து விற்பனை செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகரிக்கும் கஞ்சா விற்பனை
தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப்பொருட்களின் விநியோகம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு எவ்வளவோ முயற்சி செய்தாலும் ஏதோ ஒரு வகையில் போதை கும்பல் ஊடுருவி வருகிறது. அந்த வகையில் கஞ்சாவை பொட்டலங்களாக கொடுத்தால் எளிதாக கண்டறிந்து விடுவார்கள் என்பதை அறிந்த கஞ்சா கும்பல் சாக்லெட் பாக்கெட்டில் உருட்டி மிட்டாய் போல விநியோகம் செய்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படிப்பட்ட கும்பலை கோவை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து கோவை போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டனர். கோவை கண்ணப்பநகர் சங்கனூர் பகுதியில் இரு சக்கர வாகனம் ஓட்டி சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரனாக பதிலளித்துள்ளார். இதனையடுத்து அந்த நபரின் வாகனத்தில் இருந்த மிட்டாய் பாக்கெட்களை சோதனை செய்துள்ளனர்.
பயணிகள் வேனில் மின்சாரம் தாக்கியதில் 10 பேர் துடி துடித்து உயிரிழந்தனர்.. நள்ளிரவில் பயங்கரம்.
போதை சாக்லெட்கள் பறிமுதல்
அந்த சாக்லெட் மீது சந்தேகம் வந்ததையடுத்து பிரித்து பார்த்துள்ளனர். அப்போது அந்த சாக்லெட் குழந்தைகள் சாப்பிடும் சாக்லெட் அல்ல போதை பிரியர்களின் பிரியமான கஞ்சா சாக்லெட் என்பது தெரியவந்தது. உடனடியாக அந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் உத்திரபிரதேசத்திலிருந்து கஞ்சா சாக்லெட்டுகள் தயாரிக்கப்பட்டு கோயமுத்தூருக்கு ரெயில், லாரிகளில் கடத்தி வருவது தெரியவந்துள்ளது. கஞ்சா சாக்லெட்டை விரும்புவோருக்கு அவர்கள் கேட்கின்ற இடங்களுக்கே சென்று தந்து வருகின்றனர் . பள்ளி கல்லூரி மாணவர்களே கஞ்சா சாக்லெட் வியாபாரிகளின் இலக்காக வைத்துள்ளனர். கஞ்சா சாக்லெட்டை 50, 100 ரூபாய்க்கே விற்கின்றனர். இதனையடுத்து கஞ்சா கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்
மதுரையில் கலைஞர் நூலக கட்டிடத்தில் விபத்து..!! வடமாநில இளைஞர் உயிரிழந்ததால் பரபரப்பு