Asianet News TamilAsianet News Tamil

கள்ளக் காதலனுக்கு தெரியாமல் டாக்டருடன் கள்ளத்தொடர்பு! தொடர்பை துண்டிக்க மறுத்ததால் கள்ளக் காதலன் வெறிச்செயல்!?

The brutal murder of the girl refused to disconnect the doctor
The brutal murder of the girl refused to disconnect the doctor
Author
First Published Jan 28, 2018, 5:43 PM IST


நித்திரவிளை அருகே ஆற்றில் சடலமாக மிதந்த இளம்பெண், 2 குழந்தைகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலிசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

குமரி மாவட்டம் நித்திரவிளை அடுத்த வள்ளவிளை ததேயுபுரத்தை சேர்ந்தவர் விஜயதாசன். கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பேபிஷாலினி என்ற சங்கீதா இவர்களுக்கு சஞ்சய், பியூ போபர் என்ற இரு மகன்கள் உண்டு. காஞ்சாபுரம் பகுதியில் விஜயதாசன் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இரு வாரங்களுக்கு முன் விஜயதாசன் கடல் தொழிலுக்காக கேரளா சென்றார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சங்கீதாவும் 2 பிள்ளைகளும் கணபதியான்கடவு பாலம் அருகே தாமிரபரணி ஆற்றில் சடலமாக கிடந்தனர். உடல்களை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, மர்ம சாவு என வழக்கு பதிந்தனர்.

நேற்று பிரேத பரிசோதனையில் 3 பேரும் கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. சங்கீதாவின் கழுத்து எலும்புகள் உடைந்துள்ளன. குழந்தைகள் வயிற்றில் தண்ணீர் இருந்தது. சங்கீதாவின் வயிற்றில் தண்ணீர் இல்லை. இதனால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். 

மேலும், பிரேத பரிசோதனைக்குப்பின் உடல்களை சங்கீதாவின் தந்தை மார்ட்டினிடம் ஒப்படைத்தனர். நன்கு தெரிந்தவரே கொலையாளி: கொலை செய்யப்பட்ட சங்கீதா புது ஆடையும், 2 குழந்தைகள் புதிய ஜீன்ஸ், டீ ஷர்ட்டும் அணிந்து வெளியே சென்றுள்ளார். இவர்களை ஒருவர் அழைத்து சென்றுள்ளார். சங்கீதாவின் கணவர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வரவில்லை. இதனால் சந்தேகத்தின்பேரில், காஞ்சாம்புறம் வீட்டை சுற்றி உள்ள 15 பேரிடம் விசாரணை நடந்தது. இவர்களில், ஹோமியோபதி டாக்டர் மற்றும் ஒரு வாலிபர் ஆகியோரை போலீசார் தங்களது பிடியில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

சம்பவம் குறித்து சங்கீதாவின் தந்தை மார்ட்டின் அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் மர்ம சாவு என வழக்கு பதிவு செய்தனர்.  3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் நேற்று மூன்று பேர் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பேபி ஷாலினியின்  தந்தை மார்ட்டினிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் 3 பேரும் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து மர்மச்சாவு என  இருந்த இந்த வழக்கு, தற்போது கொலையாக மாற்றப்பட்டுள்ளது.

சங்கீதா தற்போது வசித்து வந்த காஞ்சாம்புறம் வீட்டை சுற்றி உள்ளவர்கள், கணவரின் நெருங்கிய உறவினர்கள், சங்கீதாவின்  பெற்றோர்  மற்றும் உறவினர்கள் என பலரிடம் விசாரணை நடந்தது. இதில் சந்தேகத்தின்பேரில் ஹோமியோபதி டாக்டர் மற்றும் இனயம் புத்தன்துறையை சேர்ந்த  கலையரசன் ஆகியோரை தனிப்படை ேபாலீசார் கஸ்டடியில் வைத்து விடிய, விடிய விசாரணை நடத்தினர்.
 

கொடூரக் கொலை இனயம்புத்தன்துறை வாலிபர் கலையரசனிடம் நடத்திய கிடுக்கிப்பிடி  விசாரணையில், அவர் 3 பேரையும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அவர் போலீசில் கூறிய வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது: ‘நான்  வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தேன். பின்னர் ஊருக்கு திரும்பி விட்டேன். இந்த நிலையில் எனக்கு பேபி சங்கீதாவுடன் நெருங்கிய தொடர்பு  ஏற்பட்டது.  நாங்கள் இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம்.

மேலும் சங்கீதா, குழந்தைகளையும் அடிக்கடி  வெளியே அழைத்து செல்வதும் உண்டு. அதுபோல அருகில் மருத்துவமனை நடத்தி வரும் ஹோமியோபதி டாக்டருடனும் சங்கீதாவுக்கு தொடர்பு  இருந்து வந்தது. இதை நான் பலமுறை கண்டித்தேன். ஆனால் டாக்டருடனான தொடர்பை அவர் துண்டிக்கவில்லை. சங்கீதாவுக்கு நான் இணைந்து எடுத்துக்கொண்ட ஷெல்பி படங்களை எனது செல்போனில் வைத்திருந்தேன். இதை என் நண்பனான கிளிண்டன்  என்பவர் பார்த்து விட்டார். பின்னர் கிளிண்டன் இந்த படங்கள் குறித்து சங்கீதாவிடம் கூறி, அவரை மிரட்டி தன்னுடன் உல்லாசத்துக்கு  அழைத்துள்ளார்.

இதை பேபி ஷாலினி என்னிடம் கூறினார்.

மேலும் உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சங்கீதா என்னை வற்புறுத்தினார்.  நான் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறினார், ஆனால் எனக்கு முழு விருப்பம் இல்லை. இந்நிலையில் கடந்த 25ம் தேதி இரவு சங்கீதாவின் வீட்டருகே வந்து அவருக்கு போன் செய்தேன். அவர் வீட்டிற்குள் என்னை அழைத்தார். குழந்தைகள் இருவரும் நன்கு உறங்கி விட்டனர்.  பின்னர் நாங்கள் இருவரும் சேர்ந்து உணவு அருந்தினோம். அதன்பிறகு ஜாலியாக பேசிக்கொண்டிருந்தோம். அப்போது தன்னை திருமணம் செய்து  கொள்ளுமாறு சங்கீதா மீண்டும் என்னை வற்புறுத்தினார். டாக்டருடனான தொடர்பை துண்டித்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என  நான் கண்டிப்புடன் கூறினேன். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் சங்கீதாவை கொலை செய்வது என முடிவு செய்தேன்.

ஆனால் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் கொஞ்சிப் பேசி, ஷாலினியின் துப்பட்டாவால் அவர் கழுத்தை சுற்றி லேசாக இறுக்கி  விளையாடுவதுபோல நடித்தேன். அவரும் அதை சாதாரணமாகவே எடுத்து கொண்டார். இந்த நிலையில் எனக்கு ஆத்திரம் தலைக்கேறியது. திடீரென  துப்பட்டாவால் சங்கீதாவின் கழுத்தை நெரித்து அவரை துடிக்க துடிக்க கொன்றேன். மேலும் முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி ஓரிடத்தில்  மறைத்து வைத்தேன். பின்னர் 26ம் தேதி அதிகாலை சடலத்தை எனது பைக்கின் முன்புறம் வைத்து தாமிரபரணி ஆற்று பகுதிக்கு கொண்டு சென்றேன்.  பின்னர் சடலத்தை தண்ணீரில் வீசிவிட்டேன் என இவ்வாறு கூறியுள்ளார்.

பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து குழந்தைகளை எழுப்பினேன். உங்கள் அம்மா உங்களுக்காக காத்திருக்கிறார். நல்ல முறையில் ஆடைகள் அணிந்து  விரைவில் கிளம்புங்கள். வெளியே செல்லலாம் என கூறி அழைத்தேன். அவர்கள் என்னுடன் பலமுறை வெளியே வந்துள்ளதால், மறுப்பு எதுவும்  தெரிவிக்காமல் டிப்-டாப்பாக ஆடைகள் அணிந்து கிளம்பினர்.  அவர்களை நான் பைக்கில் அழைந்து சென்றேன். பின்னர் தாமிரபரணி ஆற்றின் ஆழமான பகுதியில் இருவரையும் தண்ணீரில் வீசி கொன்று விட்டேன்.  அதன்பின் எதுவும் நடக்காதது போல திரும்பி வந்து விட்டேன். இதை போலீசாரால் கண்டு பிடிக்க முடியாது என நினைத்தேன். ஆனால் போலீசார்  என்னை நெருங்கி உண்மையை கண்டுபிடித்து விட்டனர்’. இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios