The boy killed in Villupuram

நான்காம் வகுப்பு பயிலும் மாணவன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறுவனின் தாய் மற்றும் சகோதரி படுகாயத்துடன் மீட்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள வௌம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி. இவரது கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து விட்டார். ஆராயிக்கு 4 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.

கடைசி மகள் தனம் மற்றும் 4 ஆம் வகுப்பு பயிலும் மகன் தமயனுடன் ஆராயி வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலை ஆராயின் மகன் கழுத்து அறுக்கப்பட்ட கொல்லப்பட்டுக் கிடந்தார். ஆராயியும், அவரது மகள் தனமும் படுகாயத்துடன் கிடந்துள்ளனர். 

ஆராயி வீட்டில் இருந்து யாரும் வெளி வராததை அடுத்து, அருகில் இருந்தோர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது தமயன் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையிலும், ஆராயியும், அவரது மகள் தனமும் படுகாயத்துடன் இருந்ததைக் கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் அரகண்டநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஆராயி மற்றும் அவரது மகள் தனம் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த ஆராயியின் மகன் உடலை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத
பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.