ஒரே நேரத்தில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்.? கூடுதல் கமிஷ்னர் வெளியிட்ட தகவல்
சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இன்று காலை இமெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு நிபுரணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டர். அடுத்த ஒரு சில மணி நேரத்தில் அடுத்தடுத்து 14 பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனால் பள்ளியில் உள்ள ஆசியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் வெடிகுண்டு தொடர்பான தகவல் பரவியதையடுத்து பெற்றோர்கள் அலறி அடித்து பள்ளிக்கு சென்று குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வர தொடங்கினர். ஒரு கட்டத்தில் பள்ளி நிர்வாகம் சார்பாகவே குழந்தைகளை அழைத்த செல்லும் படி குறுஞ்செய்தி அனுப்பினர்.
வெடிகுண்டு மிரட்டல்- தனிப்படை அமைப்பு
இந்தநிலையில் இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, வட சென்னையில் உள்ள சில பள்ளிகள் மற்றும் ராயப்பேட்டை,முகப்பேரில் உள்ள சில தனியார் பள்ளிகள் என 13 பள்ளிகளின் மெயில் ஐ.டி.க்கு, பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக அகற்றாவிட்டால் குண்டு வெடிக்கும் என இ மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மிரட்டல் குறித்து காலை 10:30 மணி அளவில் முதல் தகவல் கிடைத்ததாகவும், உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு Bomb Detection and Deactivation Squad அனுப்பப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும்,
வெடி குண்டு மிரட்டல் புரளி
இது குறித்து பொது மக்கள் யாரும் பதற்றமடைய தேவையில்லை என கூறினார். மெயில் அனைத்தும் ஒரே இ மெயில் ஐ.டி.யில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரித்ததில் அது ஒரு புரளி என தெரியவந்துள்ளதாகவும், இ மெயில் அனுப்பிய நபரை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த வெடிகுண்டு மிரட்டல் தேர்வு பயத்திற்காக விடுக்கப்பட்டதை போல தெரியவில்லை எனவும், மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் பெரும்பாலும் இன்று எந்த தேர்வும் நடைபெறவில்லை என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
Bomb Threat for Chennai Schools : சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!