யார் தஞ்சாவூர் மாநகராட்சியை கைப்பற்றுவது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி தஞ்சாவூர் மாநகராட்சியில் 18 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.. அதன் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் இதோ உங்களுக்காக..
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தஞ்சாவூர் மாநகராட்சியை எந்தக் கட்சி கைப்பற்றி வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகள், ஆடுதுறை, அம்மாபேட்டை, அய்யம்பேட்டை, சோழபுரம், மதுக்கூர், மேலத்திருப்பூந்துருத்தி, மெலட்டூர், ஒரத்தநாடு, பாபநாசம், பேராவூரணி, பெருமகளூர், சுவாமிமலை, திருக்காட்டுப்பள்ளி, திருநாகேசுவரம், திருப்பனந்தாள், திருபுவனம், திருவையாறு, திருவிடைமருதூர், வல்லம், வேப்பத்தூர் ஆகிய 20 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 459 உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டனர்.
இதில் பெருமகளூர் பேரூராட்சியில் இரு வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9 ஆவது வார்டு திமுக வேட்பாளர் அனுசுயா மாரடைப்பால் காலமானதால், அந்த வார்டின் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சிக்கும் மேயர் பதவிக்கு பொது வேட்பாளராக ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை, அதிராம்பட்டிணம் நகர் மன்ற தலைவராக பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாநகராட்சியிலுள்ள 51 வார்டுகளில் 282 பேர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக கூட்டணியில் அதிமுக 50 வார்டுகளிலும், தமாகா ஒரு வார்டிலும், திமுக கூட்டணியில் திமுக 41 வார்டுகளிலும், காங்கிரஸ் 4 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை தலா ஒரு வார்டிலும் போட்டியிடுகின்றன. இதில், 40 வார்டுகளில் திமுக- அதிமுக இடையே நேரடி போட்டி இருக்கிறது.
தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் திமுக 41 இடங்களில் போட்டியிட்டு 34 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ் 2 இடங்களிலும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடத்திலும், வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 7 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும், அமமுக 1, சுயேச்சை 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். ஒரத்தநாடு பேரூராட்சியில் 9 வார்டுகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிகள் மொத்தமுள்ள 15 வார்டுகளில், 11 வார்டுகளை திமுகவும், இரண்டு வார்டுகளை அ.ம.மு.க.வும் 2 வார்டுகளை சுயேச்சையும் வெற்றி வெற்றி பெற்றுள்ளனர். தஞ்சாவூர் மாநகராட்சி 11 வார்டில் திமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் வெற்றி; தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு 12 -ல் திமுக வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி பெற்றுள்ளார். திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் இதுவரை எண்ணப்பட்ட 7 வார்டுகளில், 5 இடங்களை திமுகவும், தலா ஒரு இடத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஒரத்தநாடு 9-வது வார்டில் அதிமுக வேட்பாளர் அமுதா வெற்றி; தஞ்சாவூர் மாநகராட்சி 10-வது வார்டு திமுக வேட்பாளர் புண்ணியமூர்த்தி வெற்றி. கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 இடங்களில், 14 வார்டுகளில் திமுக 10 இடங்களையும், சுயச்சை இரு இடங்களையும், காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 1 இடங்களை கைப்பற்றியுள்ளது.
எனவே இந்தமுறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சாவூர் பகுதி வாக்காளர்கள் யாருக்கு ஆதரவு தரப் போகின்றனர் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தஞ்சாவூர் மாநகராட்சியில் 18 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அவற்றின் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் அறிந்துகொள்ள ஏசியாநெட் தமிழை தொடர்ந்து படியுங்கள்.
