thanjai farmers is support to the delhi farmer protest

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர். ஐந்தாவது நாளான இன்று உடலில் சேற்றைப் பூசியபடி அவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில் தமிழக விவசாயிகள் 19-ஆவது நாளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக விவசாயிகளிடம் போராட்டத்தை கைவிடுமாறு மத்திய, மாநில அமைச்சர்களும், முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களும் போராட்டத்தை கைவிடுமாறு கூறினார். 

ஆனால் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கை விடபோவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை விவசாயிகள் தங்களது ஆதரவை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஐந்தாவது நாளான இன்று தங்களது உடலில் சேற்றை பூசி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தி வரும் இவர்கள், டெல்லியில் உள்ள தமிழக விவசாயிகள் கேட்டுள்ள அதே கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி போராடி வருகின்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் முன் சற்று பரபரப்பு நிலவுகிறது.