விழுப்புரம் அருகே உரக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே பிடாகம் பகுதியை சேர்ந்தவர் சம்பந்தமூர்த்தி. இவர் அதே பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார்.

தினமும் காலை உரக்கடைக்கு சென்று விட்டு மாலை தான் வீடு திரும்புவார். வழக்கம்போல் இன்றும் வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்றுள்ளார்.

மீண்டும் மாலை வீடு திரும்பிய சம்பந்தமூர்த்தி வீட்டின் பூட்டு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 சவரன் நகை மற்றும் தங்க நாணயம் கொள்ளையடிக்கபட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.