பயங்கர சத்தத்துடன் வெடித்த ஹீலியம் சிலிண்டர்... தூக்கி வீசப்பட்ட பலூன் வியாபாரி... அடுத்து நிகழ்ந்தது என்ன?
திருச்சியில் தனியார் துணிக்கடை அருகே ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் தனியார் துணிக்கடை அருகே ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி நெருங்குவதை முன்னிட்டு திருச்சி மெயின்கார்டுகேட் அருகே உள்ள துணிக்கடையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் கடையின் முன்பு ஏராளமான இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் அங்கு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இதையும் படிங்க: சோழ மன்னர்களோட பேரு வச்சுருக்கீங்களா? அப்போ உங்களுக்கு பிரியாணி இலவசம்... எங்க தெரியுமா?
இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. இந்த விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியாத நிலையில் நீண்ட நேரத்திற்கு பிறகு பலூனுக்கு நிரப்பப்படும் ஹீலியம் காஸ் சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. மேலும் இந்த விபத்தில் பலூன் வியாபாரி படுகாயமடைந்த சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: கணவன் கண்முன்னே மனைவியிடம் சில்மிஷம் செய்த காவல்துறை அதிகாரி.. இதுதான் சட்டம் ஒழுங்கா? வைரல் வீடியோ!
இதுக்குறித்து தகவலறிந்த வந்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டதில், அந்தப் பகுதியில் பலூன் வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரி காஸ் சிலிண்டரை ஆட்டோவில் ஏற்ற முயன்ற போது இந்த வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழந்த பலூன் வியாபாரி யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விவரம் தற்போது வரை தெரியவில்லை எனக்கூறப்படுகிறது. இந்த விபத்தில் மேலும் சிலர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.