மாணவர்கள் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறையில்லையா? உயர்நீதிமன்றம் கிடுக்குப்பிடி
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தை திரும்ப பெற முடியுமா? தேர்வு நேரம் என்பதால் வேலை நிறுத்தத்தை ஆசிரியர்கள் திரும்பப் பெற முடியுமா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தை திரும்ப பெற முடியுமா? தேர்வு நேரம் என்பதால் வேலை நிறுத்தத்தை ஆசிரியர்கள் திரும்பப் பெற முடியுமா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நிலுவையில் இருந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதனிடையில் அரசு தரப்பில் ஆசிரியர்கள் எச்சரிக்கை விடுத்தும் பணிக்கு திரும்பாததால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்து அவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று வருகிறது. அப்போது தமிழக அரசு மீது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அரசு மீது சரமாரி புகார்களை அளித்தனர். போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது பொய் வழக்குகளை தமிழக அரசு போட்டு கைது செய்கிறது என்று ஜாக்டோ ஜியோ சார்பில் வாதத்தை முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நீதிபதிகள் கூறுகையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளிடம் அரசு ஏன் பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது? தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் புது பிரச்சினையை அரசு உருவாக்குகிறது. தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களும் பணி நிரந்தரம் கோரி போராடுவர், வழக்கு தொடருவர் என்று நீதிபதிகள் சரமாரியாக விமர்சனம் செய்தனர்.
அரசு ஊழியர் போராட்டம் தொடர்பாக அரசுக்கு இடைக்கால உத்தரவை போட முடியாது. அரசின் நிதி நிலைமை தொடர்பான விஷயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து விட்டனர். சட்டப்படியான தீர்வுகளை நாடாமல் போராட்டத்திற்கு சென்று விட்டதால் உத்தரவு பிறப்பிக்க முடியாது. தமிழக அரசும், சங்கங்களும் பேசி முடிவெடுக்க வேண்டும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் சாலையில் இறங்கி போராடுவது ஆசிரியர்களுக்கு அழகல்ல. மாணவர்கள் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறையில்லையா? என நீதிபதி கிருபாகரன் அதிருப்தி தெரிவித்தார். தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்ப முடியுமா? என நாளை மதியம் பதிலளிக்க ஜாக்டோ ஜியோவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.