Asianet News TamilAsianet News Tamil

மாணவர்களின் நலனுக்கு இதுதான் சரி.. அமைச்சருக்கு முக்கிய கோரிக்கை வைத்த ஆசிரியர்கள்..

ஆசிரியர்கள் முழுமையாக மாணவர்களுடன் தொடர்பில் இருந்தால் மட்டுமே கற்றல் - கற்பித்தலை மேம்படுத்துவது சாத்தியாமாகும் என்றும் பயிற்சிகளுக்காக ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு அமைச்சருக்கு ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 

Teacher organization request to the Minister of School Education
Author
Tamilnádu, First Published May 26, 2022, 10:35 AM IST

இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்ட அறிக்கையில்,”தேர்வுக்குப்பின் பள்ளிகள் திறப்பு மற்றும், வரும் கல்வியாண்டில் 12-ம்வகுப்புக்கு மார்ச் 13-ல், 11-ம் வகுப்புக்கு மார்ச் 14-ல், 10-ம் வகுப்புக்கு ஏப்.3-ல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று முன்கூட்டியே அறிவிக்கப் பட்டுள்ளதை வரவேற்கிறேன்.

மேலும் படிக்க: ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது... அரசுக்கு சாதகமான உயர்நீதிமன்ற தீர்ப்பு!!

கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே பொதுத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பது, மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆசிரியர்களுக்கு திட்டமிடல் எளிமையாக அமையும். ஆசிரியர்கள் வேலை நாட்கள் முழுவதும் பள்ளியில் இருந்தால் மட்டுமே கற்றல் - கற்பித்தல் பணிகளை மேம்படுத்துவது சாத்தியம்.

எனவே, மாணவர்களின் நலன்கருதி கற்பித்தல் பணியைத் தவிர மற்ற பணிகள் மற்றும் பயிற்சிகளுக்காக ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பள்ளிக்கல்வி அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். ஏற்கெனவே கொரோனா காலகட்டத்தில் மாணவர்களிடையே கல்வித்தொய்வு ஏற்பட்டது. எனவே, ஆசிரியர்கள் முழுமையாக மாணவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். மேலும், எமிஸ் இணையதளத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ‘ஹெல்ப் டெஸ்க்’ உருவாக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

மேலும் படிக்க: அசிங்க அசிங்கமா திட்டி ஓயாத டார்ச்சர்.. வேதனையில் பிள்ளைகளை தவிக்க விட்டு பெண் தற்கொலை..!

Follow Us:
Download App:
  • android
  • ios