Asianet News TamilAsianet News Tamil

ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது... அரசுக்கு சாதகமான உயர்நீதிமன்ற தீர்ப்பு!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு சார்பில்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

no impediment can be imposed to the action of removing aquatic occupants says highcourt
Author
Chennai, First Published May 25, 2022, 9:21 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு சார்பில்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள கடல் சார் படிப்புகளுக்கான தனியார் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் அருகே நீர் நிலைகள் உள்ளது. அந்த நீர் நிலைகளில் பாம்பு, கொசு போன்ற பூச்சிகள் பி.எஸ்.ஆர். திட்டத்தின் கீழ் அகற்ற வேண்டும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீக்க வேண்டும்  திருபோரூர் ஊராட்சி ஒன்றியம் தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்திற்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டு, அங்கு ஆக்கிரமிப்புகள் ஏதாவது இருக்கின்றனவா? இருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

no impediment can be imposed to the action of removing aquatic occupants says highcourt

இதற்கு எந்த தெளிவான நடவடிக்கையும் பல்கலைக்கழகம் தரப்பில் இருந்து எடுக்கப்படாத காரணத்தினால், அதனை அகற்றுவதற்கான நடவடிக்கை திருபோரூர் ஒன்றியம் மூலமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து தனியார் நிகர் நிலை பல்கலைக்கழகம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியன், நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அங்கு பல்கலை தரப்பில் ஆக்கிரமிப்புகள் ஏதும் இல்லை என அரசிடம் எந்த தகவலும் தெரிவிக்காத நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக ஊராட்சி ஒன்றியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

no impediment can be imposed to the action of removing aquatic occupants says highcourt

இரு தரப்பு வாதங்கள் அனைத்தையும் கேட்ட நீதிபதிகள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான அரசின் நடவடிக்கைகலீல் நீதி மன்றம் தலையிட முடியாது என்று கூறினார். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என கூறி இந்த வலக்கை ஜூன் மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இதன்மூலம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios