கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மார்கெட் கமிட்டி வளாக கட்டிடத்தில் டீ கடை வைத்து நடத்தி வரும் கூலி தொழிலாளி செல்வம் மகன் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார்.

மே 6ஆம் தேதி நடந்த இந்த நீட் தோ்வு நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் எழுதினா். மேலும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1.03 லட்சம் மாணவா்கள் நீட் தோ்வு எழுதினர். தமிழ் மொழியில் சுமார் 24,720 பேர் எழுதி இருந்தனர். இந்தநிலையில், தேர்வு முடிவு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே இன்று பகல் 12.30 மணிக்கு தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. 

இதில், டீ கடை தொழிலாளி மகன் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார். இவர் இந்து ஆதிதிராவிடர் வகுப்பை சார்ந்தவர் கூலி தொழிலாளியன செல்வம் என்பவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். மிகவும் வறுமையான  சூழ்நிலையில் தனது பிள்ளைகளை தமிழ் வழி பள்ளியில் விருத்தாசலம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில் படிக்க வைத்து வந்தார்.

இந்நிலையில் 10-ம் வகுப்பு பொது தேர்வில் 467 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவர் என வெற்றி பெற்றுள்ளார். இதே போல் +2 ம் வகுப்பில் 975 மதிப்பெண்கள் பெற்று   S.பிரேம்குமார்   பள்ளியின் முதல் மணவனாக வெற்றி பெற்றார்.

இவரது விடா முயற்சியாலும் தன் நம்பிக்கையால் நீட் தேர்விற்கு யார் உதவியும் இல்லாமல் வீட்டிலெயே படித்து 97 - மதிப்பெண்கள் பெற்று வெற்றி  பெறுன்ளார்.                               

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது;  எனது குடும்பம் மிகவும் கஸ்ட நிலையில் எங்கள் அப்பா டீ கடை தொழில் செய்து அதில் வரும் வருமானத்தில் படிக்க வைத்தார் அதற்கான வெற்றி கிடைத்து. பெரம்பலூர் மாவட்டம் குழமூர் கிராமத்தை சேர்ந்த எனது சமூகத்தை சேர்ந்த அக்கா அனிதாவின் கனவை நிறைவேற்றியுள்ளேன்.

என்னை போன்ற ஏழை சகோதர்கள்,   நன்றாக படித்து முன்னுக்கு வரவேண்டும். நான் மருத்துவ படிப்பு படித்து என்னை போன்ற, ஏழைகளுக்கு உதவி செய்வேன் என இவ்வாறு கூறினார்.