tasmac staff attacked by unknown and 6 lakhs robbed

ஆம்பூர் வடகரையில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ. 6.19 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் வடகரையில் அரசு டாஸ்மாக் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ரவிசங்கர் என்பவர் டாஸ்மாக் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.

இரவு டாஸ்மாக்கை பூட்டி விட்டு வசூல் பணத்தை வீட்டிற்கு எடுத்து செல்வது வழக்கம். வழக்கம்போல் ரவிசங்கர் நேற்று இரவு டாஸ்மாக்கை பூட்டி விட்டு வசூல் பணமான 6.19 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது திடீரென ரவிசங்கரை வழிமறித்த மர்ம நபர்கள் அவரை தாக்கிவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து ரவிசங்கர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.