தமிழகத்தில் போக்குவரத்து துறை கட்டணங்கள் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி !
ஒருபக்கம் பெண்களுக்கு இந்த திட்டம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், மற்றொரு பக்கம் தமிழக அரசு கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆரம்பித்தது. அந்த வகையில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பையும் பெற்று பெற்றது. தமிழக அரசின் மற்ற திட்டங்களை போலவே இந்த திட்டமும் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது.
மேலும் செய்திகளுக்கு..குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! ரேஷனில் இனி இலவச பொருட்கள் கிடையாது
அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது மிக முக்கியமான விஷயமாகும். சமூக நீதிக்கு இது அடித்தளம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதை நினைவில் கொள்வது அவசியம். ஒருபக்கம் பெண்களுக்கு இந்த திட்டம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், மற்றொரு பக்கம் தமிழக அரசு கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
இந்த இழப்பை ஈடு செய்யும் விதமாக தமிழக அரசு, போக்குவரத்து துறைக்கு இழப்பீடு தொகையை அளித்து வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து துறையில் சேவை கட்டணங்களை அரசு உயர்த்த உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதாவது, போக்குவரத்து துறையில் புதிய வாகனங்களை பதிவு செய்தல், பேன்சி நம்பர் வாங்குவதற்கு மற்றும் ஓட்டுநர் உரிமம் , எல்.எல்.ஆர் போன்றவை வாங்குவதற்கு தனியாக சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு..ஆண் நண்பர்களுடன் உல்லாசம்.. போதையில் தள்ளாடிய தோழிகள் - காதலிக்கு முன்னாள் காதலன் கொடுத்த அதிர்ச்சி
இந்த கட்டணங்களால் போக்குவரத்து துறைக்கு 2021-22-ம் நிதியாண்டில் ரூ.5,271.9 வருவாய் கிட்டியுள்ளது என்று கூறப்படுகிறது. தற்போதைய பொருளாதார நிலையில் இத்தகைய வருவாய் போதாது என்பதால் சேவை கட்டணங்களை உயர்த்த அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையடுத்து போக்குவரத்து துறை சேவைகளுக்கான கட்டணம் 10 மடங்கு வரை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருத்தப்பட்ட கட்டணம் எந்த தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்பது குறித்து பொதுமக்களுக்கு விரைவில் போக்குவரத்து துறை தெரிவிக்க உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு.. அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் !