Asianet News TamilAsianet News Tamil

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு.. அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் !

ஜூலை 17ம் தேதி, பெரும் போராட்டமாக உருவெடுத்து, பள்ளிகள் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், பள்ளிகளில் பெரும்பாலான பொருட்கள் சூறையாடப்பட்டது.

Kallakurichi school student srimathi death case sudden twists
Author
First Published Aug 23, 2022, 6:43 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர வைத்தது. பள்ளி தரப்பில் தற்கொலை செய்து கொண்டதாகவும், உறவுகள்- பெற்றோர்கள் தரப்பில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, 4 நாட்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர், அதற்கு மறுநாளான ஜூலை 17ம் தேதி, பெரும் போராட்டமாக உருவெடுத்து, பள்ளிகள் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், பள்ளிகளில் பெரும்பாலான பொருட்கள் சூறையாடப்பட்டது.  

Kallakurichi school student srimathi death case sudden twists

மேலும் செய்திகளுக்கு..தமிழகத்தில் விரைவில் உயரும் மின் கட்டணம்.. பொதுமக்கள் அதிர்ச்சி - எவ்வளவு தெரியுமா ?

மாணவி உயிரிழப்பு தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ,வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது தற்கொலை தூண்டுதல், பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

மாணவி ஸ்ரீமதியுடன் அதே பள்ளியில் தங்கிப்படித்த அவரது 2 தோழிகள் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி, சுமார் 2 மணி நேரம் ரகசிய சாட்சியம் அளித்தனர். 

மேலும் செய்திகளுக்கு..ஆண் நண்பர்களுடன் உல்லாசம்.. போதையில் தள்ளாடிய தோழிகள் - காதலிக்கு முன்னாள் காதலன் கொடுத்த அதிர்ச்சி

Kallakurichi school student srimathi death case sudden twists

ஜிப்மர் மருத்துவ குழுவினரின் அறிக்கை மற்றும் 2 மாணவிகளின் வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அமையும் என்கின்றனர் காவல்துறையினர். இந்நிலையில் ஸ்ரீமதியின் பெற்றோர் ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையை கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த ஆய்வறிக்கை நாளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிரடி திருப்பம் !

Follow Us:
Download App:
  • android
  • ios