Asianet News TamilAsianet News Tamil

காவல்துறை முழுக்க முழுக்க திமுகவின் ஏவல் துறையாகவே மாறிவிட்டது: அண்ணாமலை

காவல்துறை ஆளுங்கட்சியினர் தூண்டுதலுக்கு ஏற்ப, பாஜகவினரை மிரட்டுவதையும் துன்புறுத்துவதையும் பொறுத்துக்கொள்ள முடியாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tamilnadu Police has completely become the propaganda wing of DMK: Annamalai sgb
Author
First Published Sep 5, 2023, 10:33 PM IST

தமிழகக் காவல்துறை முழுக்க முழுக்க திமுகவின் ஏவல்துறையாகவே மாறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் ஆளுங்கட்சியினர் தூண்டுதலுக்கேற்ப பாஜகவினரை மிரட்டவும் துன்புறுத்தவும் செய்கிறார்கள் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

பரமக்குடியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி தமிழ்ச்செல்வன் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் தீக்குளித்தது குறித்து கவலை தெரிவித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், கூறியிருப்பதாவது:

தமிழகக் காவல்துறையின் பொய் வழக்குகள் மற்றும் தொடர்ச்சியான அடக்குமுறையின் காரணமாக, துடிப்பான இளைஞரான பரமக்குடி ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்கள் இன்று பார்த்திபனூர் காவல் நிலையத்திலே தீக்குளித்துள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். 

அயோத்தி சாமியார் பேச்சு வன்முறையல்ல! மனம் வெதும்பி பேசிவிட்டார்: செல்லூர் ராஜூ

தமிழகக் காவல்துறை முழுக்க முழுக்க திமுகவின் ஏவல்துறையாகவே மாறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மறந்து, ஆளுங்கட்சியினர் தூண்டுதலுக்கேற்ப, பாஜகவினரை மிரட்டுவதையும் துன்புறுத்துவதையும் பொறுத்துக்கொள்ள முடியாது.

காவல்துறையின் அடக்குமுறையை எதிர்த்து ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் தரணி முருகேசன் அவர்கள் மற்றும் இளைஞரணி மாநிலத் தலைவர் திரு. ரமேஷ் சிவா காவல்நிலையத்தின் முன் போராட்டம் நடத்தியுள்ளனர். காவல்துறையினரின் இது போன்ற பாரபட்சத் தன்மை தொடருமேயானால், தமிழகம் முழுவதும் பாஜகவினரின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது சரியல்ல: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Follow Us:
Download App:
  • android
  • ios