பிப்.11, 12 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு... தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. அறிவிப்பு!!
பிப்.11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தமிழ்நாடு ஆசிரியர் தகுதி பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பிப்.11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தமிழ்நாடு ஆசிரியர் தகுதி பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. முன்னதாக டெட் எனப்படும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜன.31 ஆம் தேதி முதல் பிப்.12 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவித்திருந்த தேர்வு அட்டவணையில் 11/02/2023 மற்றும் 12/02/2023 அன்று இறுதி பருவத்தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இதையும் படிங்க: 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்தள பேருந்துகள் இயக்க வாய்ப்பு... சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் பதில்மனு!!
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களில் பலர் திறந்தநிலை பல்கலைகழகத்தின் மூலம் மேற்படிப்பை படித்து வரும் நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு தேர்வுகளும் நடப்பது தேர்வர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் பிப்.11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த பருவ தேர்வுகளை ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பை வெளியிட தடை... உத்தரவு பிறப்பித்தது தேர்தல் ஆணையம்!!
இதுக்குறித்து தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவித்திருந்த தேர்வு அட்டவணையில் 11/02/2023 மற்றும் 12/02/2023 அன்று நடக்க இருந்த இறுதி பருவத்தேர்வுகள், தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தகுதி தேர்வு (TET) அதே தேதியில் நடக்கவிருப்பதால் அத்தேதியில் அறிவிக்கப்பட்ட தேர்வுகள் வருகிற 06/05/2023 மற்றும் 07/05/2023 தேதிகளுக்கு தள்ளிவக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும் என்பதை அறிவிக்கலாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.