65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்தள பேருந்துகள் இயக்க வாய்ப்பு... சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் பதில்மனு!!

சென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்தள பேருந்துகளை இயக்க வாய்ப்புள்ளதாக உயநீதிமன்றத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 

low floor buses can run only on 65 routes in chennai says chennai transport corporation

சென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்தள பேருந்துகளை இயக்க வாய்ப்புள்ளதாக உயநீதிமன்றத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. முன்னதாக தமிழக போக்குவரத்துக்கழகம் சார்பில் 1,107 பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டது. அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு என தாழ்தள பேருந்துகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இருவகையான பேருந்துகளும் எவ்வாறு மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதுவாக இயக்கப்படும் என்பது தொடர்பான செய்முறை விளக்கத்தை வழங்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது தமிழக போக்குவரத்துத் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநர்! தமிழக அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிடிவி

அதில், 650 மில்லி மீட்டர் உயரம் கொண்ட தளங்களுடன் கூடிய பேருந்துகளை உற்பத்தி செய்ய ஒரு நிறுவனம் மட்டுமே தயாராக உள்ளது என்றும் அதற்கும் 14 மாதங்கள் ஆகும் என்றும் கூறியதோடு சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் 442 தாழ்தள பேருந்துகளும் மூன்று மாதங்களில் இயக்கப்படும் என்றும் 100 மின்சார தாழ்தள பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னையில் தாழ்தள பேருந்துகளை எந்தெந்த சாலைகளில் இயக்க முடியும் என்பது குறித்து பதிலளிக்க தமிழக போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுவது அழகல்ல.. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துங்க.. திமுகவை அலறவிடும் கேப்டன்.!

அதில், சென்னையில் சுரங்கப்பாதை வழியாக 173 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வழித்தடங்களில் 100 சதவீத தாழ்தள பேருந்துகளை இயக்கினால் மழை காலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதேபோன்று மினி பேருந்துகள் இயக்கப்படும் 74 வழித்தடங்களிலும், மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் 186 வழித்தடங்களிலும் தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை. 342 தாழ்தள பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவற்றை தோராயமாக 65 வழித்தடங்களில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், தாழ்தள பேருந்துகள் இயக்க முடியாத வழித்தடங்களில் மனுதாரரகள் தரப்பு உள்ளிட்டோரை இணைத்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை பிப்.20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios